இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கரும்பு டன்னுக்கு ரூ.2000 வழங்கப்படும்: தமிழக அரசு

கரும்பு பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்குடன் அதற்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்த 2010-11ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில், கரும்பு விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நடப்பு அரவைப் பருவத்திற்கு (2009-2010) கரும்பு டன் ஒன்றுக்கு கூடுதல் விலையாக ரூ.100 வழங்க இந்த
அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு வழங்கப்படும் 1,550 ரூபாயை ரூ.1,650 ஆக உயர்த்தி வழங்கப்படும். வரும் அரவைப் பருவத்திற்கு (2010-2011) போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற இனிக்கும் செய்தியை கரும்பு விவசாயிகளுக்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நெல் கொள்முதல் விலை அதிகரிப்பு: ஒரு குவின்டால் நெல்லுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, சாதாரண ரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,050 ஆகவும், சன்ன ரகத்திற்கு ரூ.1,100 ஆகவும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment