இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் சர்க்கரை உற்பத்தி பாதிக்கும்: ஜெயலலிதா

கரும்புக்கு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,500 தராவிட்டால் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
÷விழுப்புரத்தில் அதிமுக சார்பில் சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அவர் இக் கருத்தை கூறினார்.
÷கரும்புக்கு டன்னுக்கு கொள்முதல் விலை ரூ.2,500 தரவேண்டும், வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தலைமையேற்று ஜெயலலிதா மேலும் பேசியது:
÷1996-ம் ஆண்டு கரும்புக்கு ஆதாரவிலை ரூ.1,000 வழங்கப்படும் என்று தந்த வாக்குறுதியை கருணாநிதி இன்னும் நிறைவேற்றவில்லை. மாநில அரசுகள் கரும்புக்கு விலை நிர்ணயிக்கக் கூடாது என்று ஆலை அதிபர்கள் வழக்கு தாக்கல் செய்தபோது, அதற்கு கருணாநிதி உடந்தையாக இருந்தார். நான் ஆட்சிக்கு வந்தபோது, அந்த தடை நீக்கப்பட்டது. அதேபோல் வாகன வாடகையை ஆலை நிர்வாகம் ஏற்கவும் நான் உத்தரவிட்டேன்.
÷சர்க்கரை விலை கிலோ ரூ.12.50-லிருந்து ரூ.14 வரை எனது ஆட்சியில் இருந்தது. நியாயவிலைக் கடையைவிட வெளிச் சந்தையில் குறைந்த விலைக்கு சர்க்கரை கிடைத்தது. அந்தளவுக்கு கரும்பு விவசாயிகளுக்கு அரசு சாதகமாக இருந்தது. கருணாநிதி அரசு பாதகமான நிலையை ஏற்படுத்தியது.
÷கரும்புக்கு மாநில அரசின் ஆதாரவிலை ரூ.219 என உள்ளதை ரூ.80 குறைத்து ரூ.139 தான் இந்த ஆட்சி வழங்குகிறது. கூலி உயர்வு, உரம் விலை உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு என விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
÷எனது ஆட்சியில் 21.38 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி 2008-09-ல் 16.16 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்க்கரை விலை ரூ.44 ஆக உயந்துள்ளது.
÷உத்தரப்பிரதேசத்தில் டன்னுக்கு ரூ.2,100 வழங்கப்படுகிறது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் கரும்புக்கு கூடுதல் ஆதாரவிலை தரப்படுகிறது. தமிழகத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1,800 வரை தருகின்றனர்.
÷ஆதாரவிலையை உயர்த்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டபோது, அதை அதிமுக தான் எதிர்த்தது. மத்திய அரசும் அந்த உத்தரவை வாபஸ் பெற்றது.
÷சட்டப்பேரவையில் ஜனவரி 11-ம் தேதி இக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினேன். ஆனால் திமுக ஆட்சி கரும்பு விவசாயிகளை துன்புறுத்தி, சித்திரவதை செய்து வருகிறது. அவர்களை பழிவாங்கி வருகிறது. கூலி கூட கொடுக்க முடியாத நிலையில் கரும்பை தீ வைத்துக் கொளுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
÷விவசாயிகள் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் திமுக பதில் சொல்லியாக வேண்டும். விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். கருணாநிதியின் ஆட்சியில் விவசாயிகளின் வயிறு எரிந்து கொண்டிருக்கிறது என்றார் ஜெயலலிதா.
÷முன்னதாக அதிமுக தலைமை நிலைய செயலர் கே.ஏ. செங்கோட்டையன் வரவேற்றார். விழுப்புரம் மாவட்டச் செயலர் சி.வி. சண்முகம் நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment