வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு தேசிய விருது
7:48 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு தேசிய விருது 0 கருத்துரைகள் Admin
கோவை வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலை பண்ணை இயந்திரவியல் துறை பேராசிரியர் துரைசாமி. வேளாண் பொறியியலில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக இவருக்கு 2007-2008ம் ஆண்டுக்கான இந்திய வேளாண் பொறியாளர்கள் சங்கத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் நடைபெற்ற 44வது இந்திய வேளாண் பொறியாளர்கள் சங்க விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் தாமஸ், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக இணை இயக்குனர் பாண்டே ஆகியோர் முன்னிலையில், குஜராத் புதுப்பிக்கக் கூடிய சக்தி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பதக் இந்த விருதை வழங்கினார். பேராசிரியர் துரைசாமியின் சாதனைகள் பற்றி கோவை வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பேராசிரியர் துரைசாமி பயிர் வாரியாக பயன்படுத்தத்தக்க வகையில் பண்ணைக் கருவிகளை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளார். தமிழகத்தில் நெல் நடவு இயந்திரங்கள் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்களை அறிமுகம் செய்வதில் உறுதுணையாக இருந்துள்ளார்.
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பத்திரிகைகளில் இவர் இதுவரை 26 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு பாராட்டு பெற்றுள்ளார். 1999ம் ஆண்டு சிறந்த பொறியாளர் முனைவர் ஆராய்ச்சிப் படிப்புக்கான விருதை, அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பெற்றுள்ளார். தற்போது இவர் வேளாண் பல்கலையில் பண்ணை சக்தி மற்றும் இயந்திரங்கள் தொடர்பான பாடத்தை கற்பிக்கும் பணியிலும், பருத்தி அறுவடைக்கான கருவிகளை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார், என கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு தேசிய விருது
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது