தொடர்ந்து குளிர் தாக்குதல் தேங்காய் உற்பத்தி குறைவு
7:45 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, தொடர்ந்து குளிர் தாக்குதல் தேங்காய் உற்பத்தி குறைவு 0 கருத்துரைகள் Admin
ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் தேங்காய் பருப்பு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டு வாரமாக தேங்காய் பருப்புக்கு ஒரே விலை நீடிக்கிறது. தேங்காய் பருப்புக்கு கிலோவுக்கு 33 ரூபாய் வரை கிடைப்பதாலும், கோடைக்காலம் தொடங்கி விட்டதால் கோபி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் பருப்பை அதிகளவில் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கோபி பகுதியில் தொடர்ந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நீடித்து வருகிறது. இதனால் தேங்காய் பருப்பை முழுமையாக காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். உற்பத்தி குறைவால் கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நடப்பு வாரம் 163 மூட்டைகளே ஏலத்துக்கு வந்தது. கடந்த வாரத்தை விட 11 மூட்டை குறைவு. ஆயில் மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய்க்கு அதிக கிராக்கி இல்லாததால், எண்ணெய் விலையிலும் பெரிய மாற்றம் இல்லை. இதனால் தேங்காய் பருப்புக்கும் விலை உயரவில்லை. நடப்பு வாரம் தேங்காய் பருப்புக்கு கிலோ ஒன்றுக்கு அதிப்பட்சமாக 33 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 32 ரூபாய்க்கும் ஏலம் போனது. கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரமும் தேங்காய் பருப்புக்கு இதே விலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வரத்து குறைவால் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தேங்காய் பருப்பு வர்த்தகம் நடந்தது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, தொடர்ந்து குளிர் தாக்குதல் தேங்காய் உற்பத்தி குறைவு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது