இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வெண்டைக்காய் அறுவடை தீவிரம்

ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெண்டைக்காய் அறுவடை சுறுசுறுப்பாக தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிக விவசாய நிலங்களை கொண்ட கோபி அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல், கரும்பு மற்றும் வாழை போன்ற பயிர்கள்தான் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தது. விவசாய கூலி தொழிலாளர் பற்றாக்குறையால், விவசாயிகள் மாற்று பயிர்களை பயிரிட தொடங்கினர். கோபி பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறைந்த காலத்தில் லாபம் தரக்கூடிய கத்தரிக்காய், தக்காளி, முள்ளங்கி, வெண்டைக்காய் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். குன்னத்தூர், கள்ளிப்பட்டி, துறையம்பாளையம், அத்தாணி, சிறுவலூர், வாணிப்புத்தூர், டி.என்.பாளையம், கடத்தூர், பாரியூர், நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி நடப்பாண்டு அதிகரித்துள்ளது. அர்க்கா, அனாமிகா, பூசா, வர்சா, உபகார் ஆகிய வெண்டைக்காய் ரகங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இத்தகைய ரகங்கள் ஒரு ஹெக்டருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூலை தரும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும், டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வெண்டைக்காய் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மண்ணில் நல்ல வடிகால் வசதி கொண்ட, காரத்தன்மை 6-6.8 இருக்கும் போது வெண்டைக்காய் மகசூல் அதிகளவில் இருக்கும்.

கோபி பகுதியில் வெண்டைக்காய் வரத்து அதிகமாக உள்ளது. கிலோவுக்கு 10 ரூபாய் வரை விற்ற வெண்டைக்காய் தற்போது 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கூடுதல் விலை கிடைப்பதால் வெண்டைக்காய் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment