இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஏல விவசாயிகளுக்கு முதன்முறையாக காய் விற்ற மறுநாளே பணம் பட்டுவாடா

ஏல விவசாயிகளுக்கு முதன்முறையாக காய் விற்ற மறுநாளே பணம் பட்டுவாடா


தெனி மாவட்டத்தில் ஏலக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், காய் விற்பனை செய்த மறுநாளே பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று கே.சி.பி.எம்.சி., ஆக்ஷன் நிறுவனம் அறித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏல விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏலக்காய்க்கு இந்த சீசனில் நல்ல விலை கிடைத்து வருகிறது.ஏலக்காய் விற்பனை பிற விவசாய பொருட்களில் இருந்து வேறுபட்டுள்ளது. ஏல விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் ஏலக்காயை, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்பைசஸ் வாரியத்தின் அனுமதி பெற்ற ஆக்ஷன் கம்பெனிகளில் தான் பதிவு செய்யவேண்டும். அங்கு வாரம் ஒருமுறை நடைபெறும் வர்த்தகத்தில், வியாபாரிகள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வார்கள்.அவ்வாறு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஏழு நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் ஆக்ஷன் கம்பெனிக்கு பணத்தை தர வேண்டும். ஆக்ஷன் கம்பெனிகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்த 15 நாள் முதல் 21 நாளுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு மேலும் சலுகை அளிக்கும் வகையில் கே.சி.பி.எம்.சி., நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment