இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயிகள், அரிசி ஆலைகள் தயக்கம் :நெல் விலை உயர்வால் கொள்முதலில் தேக்க நிலை

நெல்லுக்கு கர்நாடகாவில் கூடுதல் விலை கிடைப்பதால், தமிழக விவசாயிகள் அங்கு விற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் புதுவயல் அரிசி ஆலைகளில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரைக்குடி அருகே புதுவயல், பள்ளத்தூரில் 60 க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. தஞ்சை, பட்டுக்கோட்டை, திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரத்தில் விளையும் நெல், இங்கு கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் மூடைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, ஆலைகள் கொள்முதல் செய்கின்றன. டீலக்ஸ், கல்சர், கர்நாடகா பொன்னி என தினமும் 600 டன் வரை, அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு செல்கின்றன.

விலை உயர்வு: கடந்த ஆண்டு பருவம் தவறிய மழையால், நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முதல் ரக பொன்னி நெல் (ஒரு மூடை-61 கிலோ) 750 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 40 ரூபாய் அதிகம். இதனால் ஆலை உரிமையாளர்கள், விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். இது ஒருபுறமிருக்க கர்நாடகாவில் இதைவிட 40 ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. இதனால் தமிழக விவசாயிகள், நெல் மூடைகளை அங்கு விற்க ஆர்வம் காட்டுகின்றனர். தினமும் 16 டன் நெல் மூடைகள், கர்நாடகாவிற்கு அனுப்பப்படுகின்றன.



மேலும் உயரும்: இதனால், புதுவயல் அரிசி ஆலைகளில் (கிலோவுக்கு) 26 ரூபாய்க்கு விற்ற அதிசய பொன்னி, தற்போது 27 ரூபாயாகவும்; 31 க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி, 32 க்கும்; 35க்கு விற்ற கர்நாடகா பொன்னி, 36 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.அரிசி ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:நெல் கொள்முதலில் உள்ள தேக்க நிலையால், புதுவயல் ஆலைகளில் அரிசி விலை, கிலோவிற்கு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பொன்னி ரக நெல்லுக்கு, கர்நாடகாவில் அதிக விலை கிடைக்கிறது. ஆலைகளில் பழைய நெல் மூடைகள் இருப்பு உள்ள வரை, அரிசி விலையில் மாற்றம் இருக்காது. அதன் பிறகு விலை உயரும் என்றார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment