விவசாயிகளை பாதுகாக்க புது திட்டம்-மத்திய அரசு திட்டம்
5:47 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, விவசாயிகளை பாதுகாக்க புது திட்டம் 0 கருத்துரைகள் Admin
விவசாயிகளை நஷ்டத்திலிருந்து பாதுகாக்க அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மாவட்டம் தோறும் விவசாயிகளுக்கு, விவசாயம் சார்ந்த அனைத்து சட்டப்பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
விவசாயிகள் விதைகள், இடுபொருள்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள் வாங்கும் போது அதற்கான பில்லும், சம்பந்தப்பட்ட பொருளின் ரகம், காலாவதியான பொருளா? முளைப்பு திறன் ஆகியவற்றை சோதனை செய்து வாங்க வேண்டும். இதன்பின், அந்த பொருளை பயன்படுத்தியதில் நஷ்டம் ஏற்பட்டால் நுகர்வோர் குறைதீர் மன்றத் தில் எப்படி புகார் செய்ய வேண்டும். பாதிப்புக்கு வழங்கப்படும் தீர்ப்புகள் ஆகியவை குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.மாவட்டங்களில், விவசாய இணை இயக்குனர், உழவர் பயிற்சி மைய துணைஇயக்குனர், நுகர்வோர் அமைப்பின் மாநில தலைவர் உட்பட அதிகாரிகள் பிப்., 18, 25 ஆகிய தேதிகளில் பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, விவசாயிகளை பாதுகாக்க புது திட்டம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது