இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் சகாயம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் அடையாள அட்டை உள்ளதா, தராசு எடைக்கற்களில் முத்திரையிடப்பட்டுள்ளதா என சோதனையிட்டார். ராசிபுரம் உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் தங்களது அடையாள அட்டையை கொண்டு வருகின்றனரா, அவர்களது தோட்ட விளைபொருட்களா என்பதையும் கேட்டறிந்து, அதை வி.ஏ.ஓ.,க்கள் உறுதி செய்யவேண்டும். மேலும், விவசாயிகள் உழவர் சந்தைக்கு வரும்போது பஸ்களில் லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கேட்டறிந்த கலெக்டர் சகாயம், எடைக்கற்களில் முத்திரை இடப்பட்ட விவரம் குறித்தும் ஆய்வு செய்தார். பின், பூ வியாபாரி ஒருவரிடம் பொக்கே முறையில் பூக்கள் விற்பனை செய்தால் நன்கு லாபம் ஈட்ட முடியும் என அறிவுறுத்தியதோடு, அவை தயார் செய்வதற்கான பயிற்சி அளிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், ராசிபுரம் உழவர் சந்தையில் நாளொன்றுக்கு 17 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யாமல், மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும் எனவும் அறிவுறுத்தினார்.

பின், பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்த கலெக்டர் சகாயம் அங்குள்ள கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பள்ளி மாணவ, மாணவியருக்கு ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆண்டகலூர்கேட் பகுதியில் சேலத்திலிருந்து வாகனங்களில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையிட்டார். ஆய்வின்போது ஆர்.டி.ஓ., ராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம், போலீஸ் டி.எஸ்.பி., மாதவன் உட்பட பலர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment