நோய் தாக்கிய நெற்பயிரை பார்வையிட்ட அமைச்சர்
7:12 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, நோய் தாக்கிய நெற்பயிரை பார்வையிட்ட அமைச்சர் 0 கருத்துரைகள் Admin
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில் நன்கு வளர்ந்து வரும் பயிர்களில் புகையான், நெற்பழம் போன்ற தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரணம் வழங்க, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி அமைச்சர் சுப.தங்கவேலன், கலெக்டர் ஹரிகரன், வேளாண்மை இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, தாசில்தார் பொன்னுலட்சுமி மற்றும் உயர் அதிகாரிகள் பயிர்களை பார்வையிட்டனர்.
அமைச்சர் சுப.தங்கவேலன் கூறுகையில்,"" பயிரில் நோயால் பாதிப்பு ஏற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, நோய் தாக்கிய நெற்பயிரை பார்வையிட்ட அமைச்சர்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது