பட்டா மாறுதலுக்கு அலைக்கழிப்பு: பரிதவிக்கும் விவசாயிகள்
7:10 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, பட்டா மாறுதலுக்கு அலைக்கழிப்பு: பரிதவிக்கும் விவசாயிகள் 0 கருத்துரைகள் Admin
பட்டா மாறுதல் கேட்டு மனு செய்த சிவகங்கை -திருப்புவனம் விவசாயிகள், கடந்த ஆறு மாதமாக அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அரசின் மானிய திட்டங்கள், காப்பீடு போன்றவற்றிக்கு விண் ணப்பிக்க, விவசாயிகளுக்கு நிலப்பட்டா அவசியம். கூட்டு பட்டாவில் இருந்து பிரித்து, தனி பட்டா வழங்க கோரி, மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் பலர் மனு கொடுத்துள்ளனர். நிலஅளவை செய்த பின் பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இத்துறையில், சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஆய்வு நடத்த தாமதம் ஆகிறது.மேலும், தனி பட்டா வழங்க, வசூல் வேட்டையும் நடப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் வழக்கம் போல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
திருப்புவனம் விவசாயி பிச்சை கூறுகையில், ""மனு செய்து ஆறு மாதமாகிறது. ஆய்வு செய்ய 1,500 ரூபாய் செலவானது. இதுவரை பட்டா கிடைக்காததால், அரசு திட்டங்களை பெற முடியவில்லை,'' என்றார்.
பரிதவிக்கும் விவசாயிகளுக்கு, உடனடியாக தனி பட்டா வழங்க கலெக்டர் மகேசன் காசிராஜன், டி.ஆர்.ஓ., சிவஞானம் முயற்சி எடுக்க வேண்டும்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, பட்டா மாறுதலுக்கு அலைக்கழிப்பு: பரிதவிக்கும் விவசாயிகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது