இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தாவர உணவை வலியுறுத்தி விழிப்புணர்வு

"சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தாவர உணவை உட்கொள்ளுங்கள்' என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.இது தொடர்பாக சி.பி.ஆர். சுற்றுச்சூழல் மைய இயக்குநர் நந்திதா கிருஷ்ணன், இணை இயக்குநர் சுதாகர், விழிப்புணர்வு நிகழ்ச்சி அலுவலர் லலிதா ராமதுரை ஆகியோர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:சி.பி.ஆர். மையத்தின் சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க பசுமை பள்ளிகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உணவு பழக்கவழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.ஒரு கிலோ தானிய உற்பத்திக்கு 900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு கிலோ கோழி இறைச்சியை உருவாக்க 3,900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ இறைச்சியை உற்பத்தி செய்ய 10 கிலோ தானியம் தேவைப்படுகிறது.புவி வெப்பமாதலுக்கு காரணமான மீத்தேன் வாயு, கால்நடைகள் அசைபோடும் போதும் வெளிவருகிறது. உலக அளவில் 37 சதவீத மீத்தேன் வாயு கால்நடைகளில் இருந்து வெளிவருகிறது.தவிர, கால்நடைகளின் பெருக்கத்தால் காடுகள் அழிக்கப்படுகின்றன.பழைய பாடத்திட்டம்: பள்ளிகளில் அறிவியல் பாடங்களின் பாடத் திட்டத்தில் உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட வைட்டமின்கள், புரதம் போன்றவை விலங்கு உணவுப் பொருள்களில் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. இதனால், அசைவ உணவு உட்கொண்டால்தான் நலமாக வாழ முடியும் என்ற கருத்து மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது.பாடத்திட்டங்களில் உள்ள அசைவ உணவுப் பொருள்கள் தொடர்பான கருத்துகள் ஆங்கிலேயக் கல்வியை அடிப்படையாகக் கொண்டவை.அவர்களின் நாட்டில் அந்த உணவுப் பொருள்கள் அதிகமாக இருந்ததால் அதைப் பற்றி அவர்கள் அப்போது தங்கள் பாடத்திட்டத்தில் சொல்லியிருந்தார்கள். அதை நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம்.நமது நாட்டின் இயற்கை வளமான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற தாவர உணவுப் பொருள்களில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துப் பொருள்களும் உள்ளன.தாவர உணவை உண்பதன் மூலம் நினைவாற்றல், சிந்திக்கும் திறன் போன்றவை மேம்படும். தவிர, புவி வெப்பமடைவதும் தடுக்கப்படும்.எனவே, தாவர உணவு பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்த சி.பி.ஆர். திட்டமிட்டுள்ளது.அதன்படி, முதல் கட்டமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படும். பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.பி.டி. கத்தரிக்காய் கூடாது"பி.டி. கத்தரிக்காய் கூடாது' என்று சி.பி.ஆர். சுற்றுச்சூழல் மைய இயக்குநர் நந்திதா கிருஷ்ணன் கூறினார்.இது தொடர்பாக அவர் கூறியது:நாடு முழுவதும் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை உண்ணக் கூடியது.அப்படி இருக்கும்போது பி.டி. கத்தரிக்காயை அறிமுகப்படுத்துவதென்பது பெரிய ஆபத்தை விளைவிக்கும். பி.டி. கத்தரிக்காயால் விவசாயிகள் காலப்போக்கில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள். தவிர, மண் வளம், மக்களின் உடல் நலம் முற்றிலும் பாதிக்கப்படும்.பி.டி. கத்தரிக்காய் கூடாது என்பதை வலியுறுத்தி அது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment