இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி. கத்தரிக்காய்: எல்லா மாநிலங்களிலும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டும்: கே.வீ. தங்கபாலு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் தொடர்பாக எல்லா மாநிலங்களிலும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: "மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிடவும், விற்பனை செய்யவும் மத்திய உயிரி தொழில்நுட்ப கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்தது. இதற்கு விவசாயிகள், இந்திய முறை மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மக்களின் கருத்தறிந்து, அதன் அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார். இந்நிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் ஜனவரி 13}ம் தேதி தொடங்கியது. ஆனால் கொல்கத்தா, புவனேசுவரம், ஹைதராபாத், பெங்களூர், நாகபுரி, சண்டிகர் ஆகிய 6 நகரங்களில் மட்டும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவது சரியல்ல. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பரந்த இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும். விவசாயிகள் மற்றும் அனைத்துப் பிரிவினரின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் வகையில், அனைவரது கருத்தையும் கேட்டறிந்து மத்திய அரசு செயல்படும் என நம்புகிறோம்" என்று தங்கபாலு கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment