இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

'கள்' இறக்கும் கோரிக்கையில் விவசாயிகள் உறுதி : தமிழக விவசாயிகள் சங்கம்


"கள்ளை உணவுப்பொருளின் ஒரு பகுதியாக, அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்' என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், இருசக்கர வாகன பேரணி நடத்தி பிரச்சாரம் செய்தனர். "மதுபான பட்டியலில் இருந்து "கள்'ளை நீக்கி, உணவின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும். தேங்காய் கிலோவுக்கு ரூ.20 விலை நிர்ணயம் செய்து, தென்னை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். கரும்பு, நெல் ஆகியவற்றுக்கு குவிண்டாலுக்கு 2, 000 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு 75 சதவீத மானியம் வழங்கி விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.


"கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயத்தை அழித்து வரும் நூறு நாள் வேலை திட்டத்தை கைவிட வேண்டும். அவிநாசி - அத்திக்கடவு திட்டம், பி.ஏ.பி.,யில் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை அமலாக்க வேண்டும். அமராவதியின் உபரி நீரை உப்பாறுக்கு விட வேண்டும். அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக உள்ள பாம்பாற்றில், கேரள அரசு அணை கட்டுவதையும், முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்."கிராமப்புற மாணவர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட கிராமப்புற வங்கிகள் கடன் வழங்காமல், நகர வங்கிகளுக்கு பரிந்துரைக்கின்றன. அந்த பரிந்துரையை ஏற்று நகர வங்கிகள், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதில்லை. எனவே, கிராமப்புற வங்கிகளிலேயே கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்."உணவின் ஒரு பகுதியான "கள்' இறக்க அனுமதிப்பது தொடர்பாக, மக்களிடம் கருத்து கேட்க, தமிழக அரசு நீதிபதி சுப்பிரமணியம் தலைமையிலான கமிஷனை அமைத்தது. அந்த கமிஷன், தமிழகத்தில் 5 இடங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டு பதிவு செய்தது. அப்போது, ம.தி.மு.க., தவிர வேறெந்த அரசியல் கட்சியும், தங்களது நிலைபாட்டை கமிஷனிடம் தெரிவிக்கவில்லை. எனவே, "கள்' இறக்குவதை ஆதரிப்பது பற்றி பகிரங்கமாக கருத்து தெரிவிக்காத கட்சிகளில் உள்ள தென்னை, பனை விவசாயிகள் மற்றும் மரம் ஏறும் தொழிலாளர்கள் விலக வேண்டும்' என்று வலியுறுத்தி பிரசாரம் செய்யப்பட்டது.இதுபற்றி அச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:தொழிலாளர்கள் தட்டுப்பாடு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை போன்ற நெருக்கடிகளால் விவசாயிகள் திணறி வருகின்றனர்.அதனால், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறோம். வாகன பிரச்சாரம் மேற்கொண்ட போது, விவசாயிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. அப்போது, "கள்'ளை உணவுப்பொருளின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர் என்பதை உணர முடிந்தது, என்றார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment