இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மரபணு கத்தரிக்காய்க்கு தடை புத்திசாலித்தனம் : வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கருத்து

"மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் வர்த்தரீதியாக அறிமுகப்படுத்த, அரசு தடை விதித்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு' என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாய விஞ்ஞானியும், பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியதாவது: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு தடை விதித்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு. இது தொடர்பான பிரச்னைகளை மிக கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். மரபணு மற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்த பரிசோதனையை வெளிப்படையாக நடத்த வேண்டும். தற்போது கிடைத்திருக்கும் காலத்தை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பயன்படுத்திக் கொண்டு, மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவுகளை மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.மரபணு மாற்றம் அனுமதி வழங்கும் கமிட்டியில், சுப்ரீம் கோர்ட் நியமித்த உறுப்பினரான பி.எம்.பார்கவா கூறுகையில்,"மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து ஆய்வு செய்வதற்கான அமைப்பு உள்ளது. இது தொடர்பாக, விலங்குகளிடம் ஆய்வு நடத்தலாம். நான் தனிப்பட்ட முறையில் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், நீண்ட கால தீமைகள் ஏற்படுமா என்பதை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும்' என்றார்.இந்திய தேசிய விதை கூட்டமைப்பு (என்.எஸ்.ஏ.ஐ.,) தலைவர் உதய் சிங் கூறுகையில்,"மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை வர்த்தக ரீதியாக பயிரிடுவது குறித்து,அரசு அறிவியல் ரீதியாக முடிவெடுக்க வேண்டும்; அரசியல் ரீதியாக அல்ல' என்றார்.இதுகுறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை வர்த்தக ரீதியாக பயிரிடும் விவகாரம் குறித்து எவ்வித சர்வதேச அளவிலான நெருக்கடியோ அல்லது பதட்டமோ இன்றி, அரசு முடிவெடுக்க வேண்டும். விவசாயிகள், நுகர்வோர், உணவு பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும் விவகாரம் என்பதால், இதில் அவசரமின்றி முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.இது குறித்த விவாதம் நாடுமுழுவதும் எழுந்த போது, அமைச்சர் ரமேஷிடம் ஒரு விஞ்ஞானி, "எல்லாரும் மொபைல் போனை ஏற்றுக் கொண்டனர், ஏன் மரபணு கத்தரிக்காய் கூடாது? என்று கேட்டார். அதற்கு பதிலாக அமைச்சர்," ஒரு விஞ்ஞானி இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். அகங்காரத்தை விஞ்ஞானம் கற்றுத் தரக்கூடாது' என்று பதிலளித்தார். பல்வேறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் சிறிதுசிறிதாக வருகிறது என்றாலும், நம்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான வகை கத்தரிக்காய் ரகத்தை அழிக்கும் இக்கத்தரிக்காய் வருவதை விவசாயிகள் ஏற்கவில்லை. மேலும், இக்கத்தரிக்காயில் இயல்பாகவே பூச்சிகளை அழிக்க "கிரை 1 ஏசி' என்ற மரபணு நச்சுத் தன்மை வாய்ந்தது. அது எந்த அளவு தீமை ஏற்படுத்தும் என்பதற்கான ஆய்வு சரியான விளக்கத்தை தரவில்லை என்பதும் எதிர்ப்பு அதிகமாகக் காரணம். ஆனாலும், அமெரிக்க மான்சான்டோ நிறுவனத்தின் பகீரத முயற்சி தற்போது பரவாமல் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment