விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்ய வேண்டும்
9:30 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்ய வேண்டும் 0 கருத்துரைகள் Admin
விதைகளை விலை கொடுத்து வாங்காமல் தமிழக அரசின் விதை கிராம திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று விவசாயிகளே அவற்றை தயாரித்து கொள்ள வேண்டும் என்று உதவி வேளாண் இயக்குநர் வி. ஜெயச்சந்திரன் அறிவுரை வழங்கினார். அரக்கோணத்தை அடுத்த தண்டலத்தில் செவ்வாய்க்கிழமை வேளாண்மை துறையினரின் கிராம விதைத் திட்ட பயிற்சி முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற அவர் பேசியது: விதைகளை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். ஒரு ஏக்கரில் மணிலா 80 கிலோ விதைக்காக போட்டால், 800 முதல் 1000 கிலோ வரை விதைகள் கிடைக்கும். ஒரு ஏக்கரில் விதை உற்பத்தி செய்தால் அதை 10 ஏக்கருக்கு பயன்படுத்தலாம். கிராமத்தில் 10 விவசாயிகள் நிலக்கடலை விதைகளை உற்பத்தி செய்தால், அவற்றை 100 விவசாயிகள் பயன்படுத்த முடியும். இம்முயற்சி மூலம் தரமான விதைகளை நாமே உற்பத்தி செய்ய முடியும். விதைகளை விலை கொடுத்து வாங்கும் அவசியம் இராது என்றார். முகாமிற்கு வேளாண் அலுவலர் பாபு தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் திருக்குமரன், தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரகாஷ், துணைத் தலைவர் தீனதயாளன், தண்டலம் ஏரிப்பாசன சங்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்ய வேண்டும்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது