நெல் கொள்முதல் நிலையம் மீது முறைகேடு புகார்
9:21 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, நெல் கொள்முதல் நிலையம் மீது முறைகேடு புகார் 0 கருத்துரைகள் Admin
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், தேவராயன்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு மூட்டைக்கு ரூ. 10-ம், வியாபாரிகள் எடுத்துவரும் நெல்லுக்கு மூட்டைக்கு ரூ. 15-ம் கட்டாய வசூல் செய்வதாக, தேவராயன்பேட்டை நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்மீது விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், நெல் தூற்றுவதற்கு மூட்டைக்கு ரூ. 3 வசூலிப்பதாகவும் இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மூட்டைக்கு 40 கிலோ என்ற அளவில் எடையிடாமல் கூடுதலாக 2 கிலோ அதிகரித்து, மூட்டைக்கு 42 கிலோ வரை எடையிடுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறியது: விதிமுறைகளுக்குப் புறம்பாக இப்படி செய்கிறீர்களே எனக் கேட்டால், அங்குள்ள ஊழியர்கள் அலட்சியமாகப் பதில் கூறுகின்றனர். எனவே, இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் நேரடி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, நெல் கொள்முதல் நிலையம் மீது முறைகேடு புகார்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது