இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விலை சரிவதால் அவசர அவசரமாக மஞ்சள் அறுவடை ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 300 சரிவு

மஞ்சள் விலை கடந்த வாரம் ஒரே நாளில் 300 ரூபாய் குறைந்ததால்,ஈரோடு மாவட்டம் கோபி சுற்று வட்டாரத்தில் முற்றிய மஞ்சளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து வேகம் காட்டி வருகின்றனர். இந்திய அளவில் ஈரோடு மஞ்சளுக்கு நல்ல மவுசு உண்டு. வழக்கமாக மஞ்சள் அறுவடை நடக்கும் தை மா வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான மஞ்சள் வியாபாரிகள் ஈரோட்டில் குவிந்து விடுவர். சென்றாண்டு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக மஞ்சள் உற்பத்தி குறைந்தது. இதனால், வட மாநிலத்தை சேர்ந்த மஞ்சள் வியாபாரிகள் ஈரோட்டில் முகாமிட்டனர். அப்போது ஒரு குவிண்டால் மஞ்சள் விலை 13 ஆயிரத்து 700 ரூபாயை தொட்அங்கன்வாடி மையத்தை திறக்க வருவாரா மந்திரி ராசா? காத்திருக்கும் சித்தன்குட்டை ஏழைக்குழந்தைகள்டி.என்.பாளையம்: பவானிசாகர் அருகே பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் அமைச்சருக்காக காத்திருக்க, ஏழைக்குழந்தைகள் அடிப்படை வசதியற்ற பாழடைந்த கட்டிடத்தில் தினந்தோறும் அவதியுறுகின்றனர். பவானிசாகர் யூனியன் பெரியகள்ளிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது சித்தன் குட்டை கிராமம். பெரும்பாலும் ஏழை விவசாயக் கூலித்தொழிலாளர்களும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுமே வசிக்கின்றனர். சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கிராமக் குழந்தைகள் இளவயது கல்வியைத் தொடரவும், சத்தான உணவு வகைகள் தந்து குழந்தைகளை முறையாக பராமரிக்கவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சித்தன்குட்டையில் அங்கன்வாடி மையம் துவக்கப்பட்டது. தற்போது 40 குழந்தைகள் இங்கு கல்வி பயில்கின்றனர். அங்கன்வாடி மைய ஊழியர் ஒருவரும், ஆயா ஒருவரும் பணியில் உள்ளனர். சித்தன்குட்டை அங்கன்வாடி மையம் இயங்கும் வாடகை கட்டிடத்தை, "கட்டிடம்' என்று அழைக்க எந்தத் தகுதியும் இல்லை. எட்டுக்கு பத்து அடி அளவில் ஹாலோ பிரிக்ஸ் கற்களால் கட்டப்பட்டு, மேலே சிமென்ட் ஷீட் வேயப்பட்டுள்ளது. வேறெந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இக்கட்டிடத்தை சுற்றிலும், புல்லும், முட்செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளன. பல்வேறு வித பூச்சிகளும், விஷ ஜந்துக்களும் தாராளமாக உலா வரும் இடத்தில் அமைந்துள்ளது இம்மையம். கழிப்பிடம் ஏதும் இல்லாததால், குழந்தைகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இக்கட்டிடத்தில் சமையல் செய்வதற்கு எவ்வித வசதியும் இல்லாத நிலையில், பக்கத்தில் உள்ள இடத்தில் சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்குகின்றனர். கட்டிடத்தில் எவ்வித ஜன்னல் வசதியும் இல்லை. மையம் இயக்கும் வேளையில் அதன் தகரக்கதவை திறந்து வைத்து விடுவர். அதன் வழியே வரும் காற்றும், சூரிய ஒளியும்தான் உள்ளே புகுகிறது. 40 குழந்தைகள் காலையில் அமர்ந்து பயிலவும், மதியம் படுத்துறங்கவும் இக்கட்டிடத்தில் போதிய இட வசதியில்லை. குழந்தைகளின் அவதியைப் போக்கும் வகையில் ஊரகவளர்ச்சித் துறை நடவடிக்கை மேற்கொண்டது. 2008-09 ஊரக உள் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சித்தன்குட்டையில் 2.63 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அங்கன்வாடி மையக் கட்டிடம் நவீன முறையில் கட்டப்பட்டது. சமையல் கூடம், கழிப்பிட வசதியுடன், குழந்தைகள் தாராளமாக அமர்ந்து படிக்கும் வகையில் கட்டிடம் அமைந்துள்ளது. மாவட்ட கவுன்சிலர் சுந்தரம் பரிந்துரையில் கட்டப்பட்ட இக்கட்டிடம் பணி முடிந்து ஆறு மாதங்களாகி விட்டன. இன்னும் திறப்பு விழா நடக்காததால் மையத்தை பூட்டியே வைத்துள்ளனர். இதுபற்றி விசாரித்ததில், மத்திய அமைச்சரும் உள்ளூர் எம்.பி.,யுமான ராசா வந்து திறக்க வேண்டும் என்பதற்காக புதிய மையம் காத்திருப்பது தெரியவந்தது. பக்கத்திலேயே அடிப்படை வசதியற்ற பாழ்பட்ட கட்டிடத்தில் குழந்தைகள் கடும் அவதியுற்றிருக்க, புதிய கட்டிடம் அமைச்சருக்காக காத்திருப்பது நியாயம்தானா? நாள்தோறும் புதிய கட்டிடத்தை ஏக்கத்தோடு பார்த்தவாறே குழந்தைகள் பழைய கட்டிடத்துக்கு நடைபோடுவது வேதனை. கோடை வெயில் கொளுத்த காத்திருக்கும் நிலையில், புதிய மையத்தை திறக்கச் செய்ய மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
டது. "தங்கம் வாங்கி தாலி கட்டி விடலாம்; மஞ்சள் வாங்கி தாலி கட்ட முடியாது போலிருக்கே' என்ற புது பழமொழியே உருவானது.
மஞ்சளுக்கு கிடைத்த விலை உயர்வால் ஈரோடு விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் பயிரிட்டனர். ஆனால், மஞ்சள் கடும் சரிவை சந்திக்கிறது. அதிர்ச்சியடைந்த விவசாயிகள் முற்றிய மஞ்சளை அறுவடை செய்யாமல், விலை உயரும் என கருதி காத்திருந்தனர். ஆனால், புதிய மஞ்சள் வரத்து அதிகரித்ததால் விலை உயராமல், நாளுக்கு நாள் குறைந்தது.
நேற்று முன்தினம் நிலவரப்படி விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 311 ரூபாய், குறைந்தபட்சமாக 9,899 ரூபாய், கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 21 ரூபாய், குறைந்தபட்சமாக 9,700 ரூபாய்க்கு விற்றது. கடந்த 5ம் தேதி விலையை விட விரலி மஞ்சள் 300 ரூபாய் வரை விலை குறைந்தது. புதிய மஞ்சள் வரத்து அதிகரிப்பதால் மேலும் விலை குறையக் கூடும் என அஞ்சும் விவசாயிகள், முற்றிய மஞ்சளை அவசர அவசரமாக அறுவடை செய்கின்றனர். மஞ்சள் விலை குவிண்டால் ஒன்றுக்கு 13 ஆயிரம் ரூபாயை தொட்டபோது கோபி, நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் பகுதியில் அதிகளவு மஞ்சள் பயிரிடப்பட்டது. பொங்கல் விழா முடிந்த பிறகு மேல்புறம் உள்ள மஞ்சள் இலைகளை விவசாயிகள் அறுக்கத் துவங்கினர். 20 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மண்ணில் உள்ள மஞ்சளை எடுக்க வேண்டும். ஆனால், விலை குறைவால் விவசாயிகள் மஞ்சளை மண்ணில் இருந்து எடுக்காமல் காலம் தாழ்த்தினர்.
தற்போது ஒரே நாளில் 300 ரூபாய் வரை விலை குறைந்ததால், மேலும் விலை குறையும் முன் மஞ்சளை மண்ணில் இருந்து தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், கோபி மற்றும் சுற்று வட்டாரத்தில் மஞ்சள் அறுவடை களை கட்ட ஆரம்பித்துள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment