இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மக்காசோளம் வெளிநாட்டு ஏற்றுமதியில் வேகம் இல்லாததால் விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட மக்காசோளம் வெளிநாட்டு ஏற்றுமதியில் வேகம் இல்லாததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி, தோட்டப்பகுதி மற்றும் நன்செய் நிலங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. சத்தான உணவு பொருளாக மட்டுமின்றி கொழுப்பு சத்து அற்ற எண்ணெய் வித்தாகவும் பயன்படும் மக்காச்சோளத்தின் சாகுபடி காலம் ஆவணி மாதத்தில் துவங்கி தை மாதம் அறுவடைக்கு தயாராகிறது. தோட்டப்பகுதி மற்றும் நன்செய் நிலங்களில் பயிரிடப்படும் சோளம் நீர் பாசன வசதி உள்ளதால் நன்றாக விளைந்து விடுகிறது. பருவ மழையை நம்பியுள்ள மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் சாகுபடி மழை பொய்த்து விட்டால் குறைந்த தரமுள்ளதாக விளைகிறது. நிலத்தை உழுது பண்படுத்தி, பின்னர் விதைத்து, உரமிட்டு, களை எடுத்து மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளித்து கடைசியாக அறுவடை செய்யப்படுவது வரை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 25 குவிண்டால் வரை மகசூலை எதிர்பார்க்கின்றனர் விவசாயிகள். ஆனால் பருவமழை பொய்த்தல், பருவகால மாற்றங்களால் புதிய புதிய நோய்கள் பரவுதல் மற்றும் இயற்கை சீற்றங்களால் வளர்ச்சி தடை படுதல் ஆகியவற்றால் மகசூல் எதிர்பார்ப்பில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தற்சமயம் மக்காச்சோளம் வெளிநாட்டு ஏற்றுமதியில் வேகம் குறைந்துள்ளதால், துறைமுக குடோன்கள் முதல் வியாபாரிகள் இருப்பு வைத்திருக்கும் குடோன்கள் வரை நிரம்பியுள்ளதால், மக்காச்சோளம் கொள்முதலும் விறுவிறுப்பு இன்றி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் கடன்களை வாங்கி விவசாயம் செய்து அறுவடை நேரத்தில் விலை குறைவதால் விற்கவும் முடியால், கடன் தொல்லை யால் இருப்பு வைக்கவும் முடியாமல் விவசாயிகள் இருதலை கொள்ளி எறும்பாய் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட கதிர்களை பணம் கொடுத்து இயந்திரங்களில் அடிக்காமல், ரோடுகளிலும் களத்திலும் போட்டு அடி த்து ஓரளவாவது பண த்தை மிச்ச படுத்துவோம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment