'லைசென்ஸ்' புதுப்பிக்கப்படாத உரம், பூச்சி மருந்து கடைகள்
10:00 AM 'லைசென்ஸ்' புதுப்பிக்கப்படாத உரம், சிறப்பு, செய்திகள், தலைப்பு, பூச்சி மருந்து கடைகள் 0 கருத்துரைகள் Admin
தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சீசனுக்கு ஏற்றவாறு பலவகையான பயிர்கள் பயிர்செய்யப்படுகின்றன. மா, நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், வாழை, வெற்றிலை உள்ளிட்டவையும், எள், உளுந்து, கடலை உள்ளிட்ட சிறுதானியப்பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள கடைகளில் உரம், பூச்சி மருந்து விற்கப்படுகிறது. இவற்றில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லரையில் விற்பனை செய்யப்படுகின்றன. பூச்சி மருந்து கடைகளுக்கு ஆண்டுதோறும் லைசென்ஸ் புதுப் பிக்க வேண்டும். சில கடைகளில் லைசென்ஸ் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இவர்கள் காலாவதியான பூச்சி மருந்துகள் மற்றும் விதைகளை விற்று வருகின்றனர். தரமில்லாத உரம் மற்றும் பூச்சி மருந்துகளை விவசாயிகள் வாங்கி செல்வதால் பாதிக்கப்படுகின்றனர். வேளாண்மை துறை அதிகாரிகள் பூச்சி மருந்து மற்றும் உரக்கடைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிச்சொற்கள்: 'லைசென்ஸ்' புதுப்பிக்கப்படாத உரம், சிறப்பு, செய்திகள், தலைப்பு, பூச்சி மருந்து கடைகள்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது