மானியத்தில் மூலிகை செடிகள் பொரங்காடு சங்கம் வலியுறுத்தல்
10:06 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மானியத்தில் மூலிகை செடிகள் பொரங்காடு சங்கம் வலியுறுத்தல் 0 கருத்துரைகள் Admin
"மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் பொரங்காடு சீமை நலச்சங்க தலைவர் ராமகிருஷ்ணன், பொதுச் செயலர் காரிகவுடர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்டத்தில், மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் வளர்க்க ஏதுவான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. வனங்களில் இயற்கையாக வளர்ந்து வந்த இவ்வகை செடிகள் தற்போது அழிக்கப்படுகின்றன.நோய் அகற்றும் மூலிகை செடிகளான அத்தி, நெல்லி, கறிவேப்பிலை, கீழாநெல்லி, வேப்பமரம், விஸ்பமரம், பூவரசு போன்ற மரங்கள் மற்றும் செப்பிலை, பச்சிலை, நன்னாரி, சோற்றுக் கற்றாழை, தும்பை, அகத்தி, அருகம்புல், துளசி மற்றும் ஆடாதொடை இலை உட்பட மூலிகை செடிகளை, வனத்துறை மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறு விவசாயிகள் வருமானம் ஈட்டும் வகையில், மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகளை உற்பத்தி செய்து, வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். இவ்வாறு, ராமகிருஷ்ணன், காரிகவுடர் கூறியுள்ளனர்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மானியத்தில் மூலிகை செடிகள் பொரங்காடு சங்கம் வலியுறுத்தல்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது