இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பெண் விவசாயிகளை அங்கீகரித்து அடையாள அட்டை வழங்க கோரிக்கை

""பெண்கள் பெயரில் விளைநிலம் இருப்பது அபூர்வமான விஷயம். மேலும், பெண்களுக்கு விவசாயிகள் என்ற அங்கீகாரம் இல்லாத நிலையை மாற்ற பெண் விவசாயிகள் குத்தகைதாரர் விவசாயிகளாக இருந்தாலும் அவர்களை அங்கீகரித்து உழவர் அட்டை வழங்கப்பட வேண்டும்,'' என பெண் விவசாயிகள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் இரண்டாம் மாநில மாநாடு ஃபிப்ரவரி ஐந்தாம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. மாநாட்டுக்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழ மாநிலத்தலைவர் ஷீலு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார். மாற்று விவசாயம், மரபணு மாற்று விதை மற்றும் பயிர்களின் விளைவுகள், புவி வெப்பம் அடைதலும் விவசாய பாதிப்பும், பாரம்பரிய விதை மற்றும் விதை வங்கியின் அவசியம் ஆகியவை குறித்து செல்வம், சித்ராதேவி, பொன்னுதாய் ஆகியோர் பேசினர். பெண் விவசாயிகள் கூட்டமைப்பின் அவசியம் குறித்து காமேஷ்வரி, லில்லிபாய் ஆகியோர் பேசினர்.நிறைவு நாளான நேற்று சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்தி உள்ள விளை நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கு தர வேண்டும். மேலும், எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் மூலமும், வளர்ச்சித்திட்டம் மூலமாகவும் விளை நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கு குறிப்பாக கூட்டு விவசாயம் செய்ய ஆர்வம் உள்ள பெண்களுக்கு உடன் வழங்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு சிறப்பு மானியம் வழங்க வேண்டும். பாரம்பரிய விதைகளை சேகரித்து, அவற்றை பாதுகாத்து விதை வங்கி அமைத்து பரிமாற்றம் செய்ய அரசு விவசாயிகளுக்கு சிறப்பு மானிய உதவிகள் வழங்க வேண்டும். விவசாய வேலையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமக்கூலி திட்டம் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெண்கள் பெயரில் விளைநிலம் இருப்பது அபூர்வமான விஷயம். மேலும், பெண்களுக்கு விவசாயிகள் என்ற அங்கீகாரம் இல்லாத நிலையை மாற்ற பெண் விவசாயிகள் குத்தகைதாரர் விவசாயிகளாக இருந்தாலும் அவர்களை அங்கீகரித்து உழவர் அட்டை வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஷீலு நன்றி கூறினார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல பெண்கள் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment