இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கன்னியாகுமரி கடலில் கல் இறால் மீன்கள் அறுவடை : மீனவர்கள் மகிழ்ச்சி

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையம் சார்பில் கன்னியாகுமரி கடலில் மிதவை கூண்டுகளில் வளக்கப்பட்ட கல் இறால் மீன்கள் நேற்று அறுவடை செய்யப்பட்டன. கிலோ 1200 ரூபாய் முதல் 1300 வரை விற்பனையாகும் என்பதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.



இந்திய கடலோர மாவட்டங்களில் மீனவர்களின் நலனுக்காக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் கடல் நடுவே மிதவை கூண்டு அமைத்து கல்லீரால் மீன்கள் வளர்ப்பதும் ஒரு திட்டம். இத்திட்டத்தில் சென்னை, விசாகப்பட்டிணம், விழிஞ்ஞம், கார்வால் உள்ளிட்ட பகுதிகளில் மிதவை கூண்டில் கல் இறால் மீன்கள் வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளன. இதில் மீனவர்களுக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது.



இதைதொடர்ந்து கன்னியாகுமரி சின்னமுட்டத்திற்கும் லீபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கல்லீரால் வளர்க்க முடிவு செய்யப்பட்டது. கடலுக்குள் 2 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த நவம்பர் மாதம் 6 மீட்டர் சுற்றளவு உள்ள 3 மிதவை கூண்டுகள் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. கூண்டுக்குள் வளர்க்கப்பட்ட கல்லீரால் மீன்கள் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று அறுவடை செய்ய முடிவு செய்யப்பட்டது.



இதற்காக நேற்று காலை தனிப்படகில் தேசிய கடல் மீன் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் சைதா ராவ், இந்திய விவசாய ஆராய்ச்சி கழக உதவி இயக்குநர் மதன்மோகன், மத்திய கடல் மீன் வளர்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராணிமேரி ஜார்ஜ், விழிஞ்ஞம் மீன் ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியதாஸ், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மைய முதல்வர் லிப்டன், மதுவிலக்கு போலீஸ் துணை சுப்பிரண்டு சிதம்பரநாதன், மாவட்ட பஞ்., தலைவி அஜிதா மனோதங்கராஜ் மற்றும் மத்திய மீன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், அதிகாரிகள் கடலுக்குள் சென்றனர்.



தனிப்படகையடுத்து 11 வள்ளங்களில் சென்ற மீனவர்கள் கூண்டில் வளர்க்கப்பட்ட 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கல்லீரால் மீன்களை அறுவடை செய்தனர். அறுவடை செய்யப்பட்ட கல் இறால் மீன்கள் ஒவ்வொன்றும் 40 முதல் 90 கிராம் எடைவரை இருந்தது. இந்த மீன் வெளிநாடுகளில் கிலோ 1200 முதல் 1300வரை விலைபோகும் என அதிகாரிகள் கூறினர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment