இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

குறைந்த நெல் சாகுபடியால் வைக்கோலுக்கு பற்றாக்குறை : கேரள வியாபாரிகளால் விலை உயரும் அபாயம்

போதிய மழை இல்லாததால் வத்திராயிருப்பு பகுதியில் காலமுறை நெல்சாகுபடி மிக குறைந்த அளவே நடந்தது. பெரும்பாலானோர் நடவு செய்யாததால் அறுவடை சீசன் விரைவில் முடிந்து வைக்கோலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது.

விருதுநகர் மாவட்டத் தின் நெற்களஞ்சியமான வத்திராயிருப்பு பகுதியில் இந்த ஆண்டு மழை மிகவும் குறைவாக பெய்ததால் இப்பகுதியில் உள்ள ஒருசில கண்மாய்களில் மட் டும் நீர் பெயரளவிற்கு இருந்தது. மற்ற கண் மாய்கள் தொடர்ந்து வறண்ட நிலையிலேயே இருந்தன.இங்கு பிளவக்கல் அணை மூலம் பாசன வசதிபெறும் கண்மாய்களில் அதை சுற்றியுள்ள 10 கண்மாய்கள் தவிர மற்றவைகளுக்கு நீர் செல்லவில்லை.
அதற்குள் அணையின் நீர் முழுவதும் காலியானது. இதன் காரணமாக வத்திராயிருப்பிற்கு கிழக்கே உள்ள விவசாய நிலங்களில் இந்த ஆண்டு நெல் நடவுப்பணிகள் ஏதும் நடைபெறவில்லை. பிளவக்கல் அணை, கூமாப்பட்டி, கான்சாபுரம், சேதுநாராயணபுரம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் மட்டுமே நெல் நடவுப்பணிகள் நடந்தது. இதனால் வைக்கோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக அறுவடை சீசன் தொடங்குவதற்கு முன்பே உள்ளூரில் உள்ள புரோக்கர்களிடம் கேரள வைக்கோல் வியாபாரிகள் வந்து அட்வான்சாக பெரிய தொகையை கொடுத்துவிட்டுச் செல்வார்கள். இதை வைத்துக்கொண்டு புரோக்கர்கள் நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஒருவர்கூட விடாமல் அறுவடைக்கு முன்பே 'டோக்கன் அட்வான்ஸ்' போட்டு வைத்து விடுவார்கள்.
அறுவடையின்போது அவ்வியாபாரிகள் கேரளாவிலிருந்து லாரிகளுடன் வந்து புக்கிங் செய்த வைக்கோல்களை அதிக அளவு ஏற்றிச் செல்வார்கள். கேரள வியாபாரிகளின் வரவாலும் அவர்கள் அதிகவிலை தருவதாலும் விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளை தவிர்த்துவிட்டு கேரள வியாபாரிகளுக்கே வைக்கோலை விற்று வந்தனர்.
இதனால் உள்ளூர் தேவைக்கு கூட ஒரு சில நேரங்களில் பற்றாக்குறை ஏற்படும். ஆனால் இம்முறை பாதியளவிற்கு கூட நெல் விவசாயம் நடைபெறாததால் கேரளாவிலிருந்து வந்த வைக்கோல் வியாபாரிகளே வெறும் லாரிகளுடன் ஊர்திரும்ப வேண்டியிருந் தது. ஏற்கனவே புரோக் கர்களிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகைக்கு கூட வைக்கோல் கிடைக்கவில்லை.
உள்ளூர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது. 400 ரூபாய் விற்றுவந்த ஒரு ஏக்கர் வைக்கோல் தற்போது ஏற்பட்ட பற்றாக் குறை காரணமாக தற்போது 600 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. மாடு வளர்ப்பவர்கள் வைக் கோல் படப்பு போட்டவர்களிடம் ஒருகட்டு 25 ரூபாய்முதல் 50 வரை கொடுத்து மாடுகளுக்கு வைக்கோல் வாங்கவேண்டியுள்ளது. இதனால் மாடுவளர்ப்பவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment