செம்மை நெல் சாகுபடி திடல்களில் வேளாண்மை விஞ்ஞானி ஆய்வு
7:04 PM சிறப்பு, செம்மை நெல் சாகுபடி திடல்களில் வேளாண்மை விஞ்ஞானி ஆய்வு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
திருநெல்வேலி மாவடாம் வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் செம்மை செல் சாகுபடி திடல்களை வேளாண்மை கல்லூரி விஞ்ஞானி ஆய்வு செய்தார்.வாசுதேவநல்லூர், சுப்பிரமணியபுரம், திருமலாபுரம், கூடலூர், ராயகிரி, சங்குபுரம் பகுதியில் செம்மை நெல் சாகுபடி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்த திடல்களை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி விஞ்ஞானி ஜோசப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்துள்ள வயல்களில் அதிக அளவு தூர் பிடித்துள்ளதையும், சாதாரணமான வழக்கமான முறையில் நடப்பட்ட வயல்களில் குறைவான அளவே தூர் பிடித்துள்ளதையும் விஞ்ஞானி ஜோசப் விவசாயிகளிடம் விளக்கினார்ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள், துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், ஆத்மா தலைவர் செண்பகவிநாயகம் உடனிருந்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்லையா, சம்சுதீன், பால்ராஜ், ஆறுமுகம், அண்ணாதுரை, போஸ் செய்திருந்தனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செம்மை நெல் சாகுபடி திடல்களில் வேளாண்மை விஞ்ஞானி ஆய்வு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது