அவுரி விதைக்கு மத்திய அரசு நூறு சதவீதம் மானியம் : தோட்டக்கலைதுறை தகவல்
7:02 PM அவுரி விதைக்கு மத்திய அரசு நூறு சதவீதம் மானியம் : தோட்டக்கலைதுறை தகவல், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
மத்திய மூலிகை நறுமண பயிர்கள் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணைந்து புளியம்பட்டியில் மூலிகை மற்றும் நறுமண பயிர்கள் விழிப்புணர்வு முகாம் நடத்தியது. ஒன்றிய துணைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கனகராஜ் வரவேற்றுப் பேசினார்.ஐதராபாத் மத்திய மூலிகை மற்றும் நறுமண பயிர்கள் மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் கலந்து கொண்டு அவுரி, நித்திய கல்யாணி, கண்வலிக்கிழங்கு போன்ற மூலிகை பயிர்கள் பாம்ரோஸ் போன்ற நறுமணப் பொருட்கள் சாகுபடி தொழில் நுட்பம், பொருட்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்வது குறித்து விரிவாக பேசினர்.விதைகள் சேகரிக்க உயர்ரக அவுரி விதைகளை மத்திய அரசு நூறு சதவீத மானியத்தில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மூலிகை பயிர் சாகுபடி செய்வதால் உள்ள நன்மைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜோசப்கருணாநிதி, ஐடிஐ நிர்வாகி கணபதி, உதவி இயக்குநர் ஆல்பிரட், பழனிவேலாயுதம் ஆகியோர் பேசினர்.

குறிச்சொற்கள்: அவுரி விதைக்கு மத்திய அரசு நூறு சதவீதம் மானியம் : தோட்டக்கலைதுறை தகவல், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது