இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

அடுத்த தலைமுறைக்கு விவசாய அறிவு-வேளாண் பல்கலை கல்வி இயக்குனர்

குலசேகரம் அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை எடுத்து செல்ல வேண்டுமென குலசேகரத்தில் நடந்த வேளாண் தொழில்நுட்ப வாரவிழாவில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன் பேசினார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் நடத்தும் வேளாண் தொழில்நுட்ப வாரவிழாவின் துவக்கவிழா நடந்தது. விழாவில் பேச்சிப்பாறை வேளா ண்மை அறிவியல் நிலைய தலைவர் இறைவன் வரவேற்றார்.



பெங்களூரு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக எட்டாவது மண்டல திட்ட இயக்குநர் சாய்ராம், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஜயகுமார், முன்னதாக வேளாண் தொழில்நுட்ப வாரவிழாவில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்கண்காட்சியை திறந்துவைத்து, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன் பேசியதாவது: தமிழகத்தில் வேளாண் தொழில்நுட்ப வார விழா இதுவரை 6 இடங்களில் நடத்தப்பட்டது. 7வதாக தற்போது குலசேகரத்தில் நடக்கிறது. விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூலுடன் லாபம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விழாவை நடத்துகிறோம். விவசாயிகள் தொழில் அறிவு, சேவை, இடு பொருட்கள் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 32 வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரத்தில் நெல் ஆராய்ச்சி மையம், பேச்சிப்பாறையில் மலைப்பயிர், வாசனை பயிர் ஆராய்ச்சி மையம், தோவாளையில் மலர் ஆராய்ச்சி மையம் உள்ளது.

இத்தனை ஆராய்ச்சி மைங்கள் பெற்றுள்ளது இந்த மாவட்டத்திற்கு பெருமையாகும். விவசாயிகளுக்கு கருத்துகளை எடுத்துரைக்கும் போது எளிமையாக சொல்ல வேண்டும். தமிழகத்தில் 350 ரக நெற்பயிர்கள் உள்ளன. வேளாண்மைக்கு கூலிகள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதை ஈடுசெய்ய வேளாண் கருவிகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். தற்போது 130 வகையான விவசாய கருவிகள் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு விவசாய பரப்பளவு, உற்பத்தியை உயர்த்த வேண்டும். விவசாயிகளுக்கு உப தொழிலாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள விலங்கியல் பல்கலைக்கழகம் மூலம் ஆடு, மாடு, பன்றி, வான்கோழி வளர்ப்பு பயிற்சிகளை கொடுத்து வருகிறோம்.மேய்ச்சல் நிலங்கள் இல்லாத பகுதிக்கு ஏற்றவகையில் ஆடு வளர்ப்பு பயிற்சி கொடுக்கிறோம். ஒரு ஆடு 6 முதல் 7 மாதத்தில் 45 கிலோ வரை எடையுள்ளதாக மாறுகிறது. இந்த ஆடு 4 ஆயிரத்து 500 ரூபாய் விலை போகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை, தென்னை பயிரிடும் விவசாயிகள் ஊடுபயிர்கள் விவசாயம் செய்து அதிக வருவாய் ஈட்டுகின்றனர். விவசாயிகள் தங்களது பிரச்னைகளை இதுபோல் நடத்தப்படும் தொழில்நுட்ப வார விழாக்களிலும், ஆராய்ச்சி மையங்களிலும் தொடர்பு கொண்டு தெரிவித்து, தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன் பேசினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment