இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விளைச்சலை பெருக்க வாழை மரத்துக்கு சிறுநீர் உரம்: விஞ்ஞானிகள் ஆய்வில் வெற்றி

திருச்சி மாவட்டம் முசிறியில் வாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. இங்கு வாழைக்கு உரத்துக்கு பதில் மனித சிறு நீரை பயன்படுத்தலாமா என்பது குறித்து சர்வதேச விஞ்ஞானிகளும் இந்திய வேளாண் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இதற்காக ஒரு ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டது. அதன் அருகே சிறுநீர் தொட்டி கட்டப்பட்டு சிறுநீர் சேகரித்து வந்து தொட்டியில் ஊற்றி சேமித்து வைத்தனர். வாரம் ஒரு நாள் 250 லிட்டர் அளவு சிறுநீர் வாழைக்கு ஊற்றப்பட்டது.

மற்ற உரங்களை பயன்படுத்திய வாழையை விட சிறு நீரை பயன்படுத்திய வாழையில் விளைச்சல் அமோகமாக இருந்தது. இந்த ஆய்வில் வேளாண்விஞ்ஞானிகளுடன் யுனிசெப் மற்றும் சுவீடன் நாட்டு சுற்றுக்சூழல் ஆய்வு நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டது. இவர்களின் சோதனை வெற்றிகரமாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விவசாயிகள் உரத்துக்காக ஆண்டுக்கு ரூ.445 கோடி செலவிடுகிறார்கள். இது போன்ற மாற்று உரங்கள் மூலம் செலவு மிச்சமாகிறது. இதுகுறித்து மூத்த விஞ்ஞானி ஏ.ஜே. ஜெயபாஸ்கரன் கூறும்போது சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாசியம் அதிகம் உள்ளது. வாழைக்கு இவை மூன்றும்தான் தேவை.

எங்கள் ஆய்வில் சிறுநீர் ஊற்றிய வாழை மரங்களில் விளைச்சல் அமோகமாக இருப்பதுடன் வாழைக்காய் பருமனாக இருக்கிறது.வாழை இலையும் கனமாக செழித்து வளர்கிறது என்று தெரிவித்தார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment