இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உர விலையை உயர்த்தினால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு உர விலையை உயர்த்தும் முடிவைக் கைவிடாவிட்டால் நாடு முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் பாரதிய கிசான் சங்க அகில இந்திய பொதுச் செயலர் பிரபாகர் கேல்கர்.பாரதிய கிசான் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் திருச்சி அருகே சீராத்தோப்பில் பிப். 18}ம் தேதி தொடங்கி, சனிக்கிழமை நிறைவடைந்தது.இதில், 30 மாநிலங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 1,000 விவசாயிகள் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் பிரபாகர் கேல்கர் சனிக்கிழமை அளித்த பேட்டி:ர விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அவ்வாறு கைவிடாவிட்டால் நாடு முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விவசாயத்தைக் காப்பாற்ற ஒட்டுமொத்த விவசாயிகளும் கடுமையாகப் பாடுபடுவர்.நாட்டிலேயே தமிழகத்தில்தான் கரும்புக்குக் குறைவான விலையைத் தருகிறார்கள். ஹரியாணா, பஞ்சாப்பில் கரும்பு விலை வெட்டுக் கூலி உள்பட டன்னுக்கு ரூ. 3,000}ம், உத்தரபிரதேசத்தில் ரூ. 2,500}ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 2,400}ம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ரூ. 1,500 மட்டுமே கொடுக்கப்படுகிறது. தனியார் ஆலைகளில் ரூ. 1,700 வழங்கப்படுகிறது.இதேபோல, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 தர வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், ஏக்கருக்கு ரூ. 10,000 மானியம் அல்லது அனைத்து விவசாயிகளும் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.இந்தக் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், நாடு முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்றார் பிரபாகர் கேல்கர். கூட்டத்தில் அகில இந்தியச் செயலர் பாண்டே, அமைப்புச் செயலர் தினேஷ் குல்கர்னி, செயலர் மோகினி மோகன் மிஸ்ரா, துணைத் தலைவர் ராகவ ரெட்டி, மாநிலத் தலைவர் பெருமாள், பொதுச் செயலர் பி. அய்யாக்கண்ணு, அமைப்பாளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment