பி.டி. கத்தரிக்காய் மீண்டும் வருமா?, வேதனை தருமா?
12:15 AM வேதனை தருமா?, சிறப்பு, செய்திகள், தலைப்பு, பி.டி. கத்தரிக்காய் மீண்டும் வருமா? 0 கருத்துரைகள் Admin
பி.டி.கத்தரிக்காயை எதிர்த்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு இயக்கம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் "பி.டி. கத்தரிக்காய் மீண்டும் வருமா? வேதனை தருமா?' எனும் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. பி.டி.கத்தரிக்காய் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேளாண்மை ஆராய்ச்சியாளர் வெ.ராஜதுரை பேசியது:பி.டி. கத்தரிக்காயால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். மரபணு விதை கத்தரிக்காயால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.3 மாதங்கள் மட்டுமே ஆய்வு செய்து விட்டு, அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர முயலுகின்றனர். மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு கத்தரிக்காயை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார். பி.டி. கத்தரிக்காய் தொடர்பாக விரிவான ஆய்வு நடத்த வேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இக்கத்தரிக்காய் பயன்பாட்டில் இல்லை. பிடி கத்தரிக்காய் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும் என்றார் ராஜதுரை.மாவட்ட துணைத் தலைவர் சோலை பழனி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர் இல.அழகேசன், ஒன்றியத் தலைவர் பி.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குறிச்சொற்கள்: வேதனை தருமா?, சிறப்பு, செய்திகள், தலைப்பு, பி.டி. கத்தரிக்காய் மீண்டும் வருமா?
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது