இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி.கத்தரிக்காய்க்கு கர்நாடகம் தடை




​ மரபணு மாற்றப்பட்ட ​(பி.டி.)​ கத்தரிக்காய்க்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக தோட்டக் கலைத் துறை அமைச்சர் உமேஷ் கத்தி தெரிவித்தார்.​ பெங்களூரில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:​ ​மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை கர்நாடகத்தில் வர்த்தக ரீதியில் சாகுபடி செய்ய அரசு தடை விதிக்கும்.​ இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதிவிட்டோம்.​ ​​ மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.​ புதன்கிழமைக்குள் பதில் ​அளிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.​ மரபணு மாற்ற கத்தரிக்காயை இந்தியாவில் அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் எடியூரப்பாவும் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.​​ மரபணு மாற்ற கத்தரிக்காயால் ஏற்படும் சாதக-பாதகங்கள் குறித்து உடனடியாக முடிவுக்கு வந்துவிட முடியாது.​ அதுபற்றி நீண்ட ஆராய்ச்சி தேவை.​ அதன் பிறகே ​அதுபற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.​ எனவே,​​ இந்தப் பிரச்னையில் மத்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்றார் அவர்.​​ மரபணு மாற்ற கத்தரிக்காயை பயன்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்.​ தலைவர் ​மோகன்பாகவத் ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment