இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி.​ கத்தரிக்காயை அனுமதிக்கலாம் என்ற பரிந்துரையை எதிர்த்து வழக்கு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைப் ​(பி.டி.​ கத்தரிக்காய்)​ பயிரிடவும்,​​ விற்கவும் அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.​ இதுதொடர்பாக திருதணிகாசலம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஹைபிரிட் சீட்ஸ் நிறுவனம்,​​ தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் மற்றும் தார்வாட் விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் பயிரிட அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கும் பொறியியல் குழு,​​ இந்தக் கத்தரியைப் பயிரிடவும்,​​ விற்கவும் 14.10.09}ம் தேதி பரிந்துரை செய்தது.​ உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி,​​ விஞ்ஞானி பி.எம்.பார்கவா இந்தக் குழுவின் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்க அவர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும்,​​ அதைப் பொருட்படுத்தாமல் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் ஆபத்தானது என்ற வல்லுநர்களின் எச்சரிக்கைகளையும் மீறி,​​ நிபுணர் குழுவின் அறிக்கைக் கிடைத்த 6 நாள்களுக்குள் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.​ மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்க,​​ மாநில அளவில் பயோ}டெக்னாலஜி ஒருங்கிணைப்புக் குழுக்களை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.​ எனவே,​​ பி.டி.​ கத்தரிக்காய் பயிரிட அனுமதிக்கலாம் என்று பரிந்துரை செய்ததே செல்லாது என்று அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment