இயற்கை உர உற்பத்திக்கான கட்டுப்பாட்டுசட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை
8:22 AM இயற்கை உர உற்பத்திக்கான கட்டுப்பாட்டு-ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
இயற்கை உர உற்பத்திக்கான கட்டுப்பாட்டு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநில உறுப்பினர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:பாரம்பரியமாக கிராம விவசாயிகள் தங்களது கால்நடைகளில் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர் மற்றும் வீட்டில் உபயோகித்த காய்கறி கழிவுகளை ஒரு குழியில் போட்டு மக்க வைத்து பின்னர் அதனை தங்களின் நிலங்களுக்கு பயன்படுத்துவது வழக்கம். இதனால் குறைந்த சாகுபடி செலவு பூச்சி தாக்குதலின்றி நஞ்சில்லாத உணவு தானியம் கிடைத்தது.
பின்னர் நாளடைவில் விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளை உபயோகப்படுத்தியதால் சாகுபடி செலவு அதிகரித்து மகசூல் குறைந்தது. மேலும் உணவே நஞ்சானது. விளை நிலமும் உப்பு நிலமாக மாறியது. இந்நிலையில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அறிமுகப்படுத்திய தற்சார்பு இயற்கை விவசாயம் பரவலாக வளர்ந்து வருகிறது. இதன் வாயிலாக விவசாயிகளின் கண்டுபிடிப்புகளான மண்புழு உரம், பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், மீன் கரைசல், தாவர பூச்சி விரட்டி கரைசல் போன்றவற்றுடன் மூடாக்கும் முறை, பல்லுயிர் பெருக்கம், பல பயிர் சாகுபடி உட்பட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இயற்கை விவசாயம் பல கிராமங்களில் வளர்ந்து வருகிறது. விவசாயிகள் உயிர் உரங்களை தாங்களே தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் நஞ்சில்லாத உணவு கிடைக்கிறது.
இந்நிலையில் அரசு கடந்த 2004ம் ஆண்டு விதை சட்டம் பின்னர் தமிழக அரசின் வேளாண் ஒழுங்கு முறை சட்டம் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாயிகளை அப்புறப்படுத்துதல், பாரம்பரிய விதைகளின் மீது மரபணு விதைகளை தெளித்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்தது. தற்போது இயற்கை உரம் தயாரிப்புக்கு கட்டுப்பாடு சட்டம் கொண்டு வருவது மிகவும் வேதனையானது. எனவே தற்சார்பு இயற்கை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இயற்கை உர உற்பத்திக்கான கட்டுப்பாடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
குறிச்சொற்கள்: இயற்கை உர உற்பத்திக்கான கட்டுப்பாட்டு-ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது