இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

அரசு அறிவிப்பு வரவேற்கத்தக்கது பி.டி.கத்திரிக்காய்க்கு தமிழகத்தில் இடமில்லை-கி.வீரமணி

தி.க. தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
வேளாண்மைத் துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்கிறோம் என்று கூறி, மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை இந்தியாவுக்குள் புகுத்தும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் முயற்சி, மனித குலத்தின் நல்வாழ்வுக்கு விடப்படும் அறைகூவல். பிடி கத்திரிக்காய் என்பதற்கு இங்கே இடமில்லை. தமிழக அரசு அதை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
காப்புரிமை என்ற பெயரால் அமெரிக்காவின் சுரண்டலை தடையின்றி நடத்திட நாம் அனுமதிக்கக் கூடாது. நம் ஊரில் முப்பாட்டிகள் காலத்தில் இருந்தவைகளைக்கூட மற்றவர் காப்புரிமை சொந்தம் கொண்டாடுவதை, நாம் ஒருபோதும் விட்டு கொடுக்கக் கூடாது.
இதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களும் விவசாயிகளும் விழிப்புணர் வுடன் செயலாற்ற வேண்டும்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment