இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொப்பரை மார்க்கெட் ஸ்தம்பிப்பு; விலை சரிவுகாங்கேயம் சுற்றுப்பகுதியில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலைகளில், எண்ணெய் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப் பட்டதால், இந்த வாரம் கொப்பரை மார்க்கெட் ஸ்தம்பித்து விலை சரிந்துள்ளது.காங்கேயம் வெளிமார்க்கெட்டில் கடந்த 30ம் தேதி நிலவரப்படி கொப்பரை கிலோவுக்கு 36 ரூபாய் அதிகபட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தேங்காய் எண்ணெய் டின்னுக்கு 760 ரூபாயும், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 52 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.கருப்புத்தேங்காய் டன்னுக்கு 11, 400 ரூபாயும், பச்சைத் தேங்காய் 10,200 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப் பட்டது. தென்னந்தோப்புகளில் கருப்புத்தேங்காய் ஒன்று 6.40 ரூபாயும், பச்சைத்தேங்காய் 5.20 ரூபாயும் அதிகப்பட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.கொப்பரை விலை ஏற்றம் நீண்ட காலம் நீடிக்காமல் திடீரென சரிந்தது. காங்கேயத்தில் உள்ள தேங்காய் எண் ணெய் ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். தேங்காய் எண்ணெய் ஆலைகளில் எண்ணெய் பிழிவது நிறுத்தம் செய்யப் பட்டுள்ளதால், கொப் பரை கொள்முதலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று நாடகளாக கொப்பரை மார்க்கெட் மீண்டும் சரியத் துவங்கியுள்ளது.நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 34.50 ரூபாய் அதிகபட்சமாக விலை கிடைத்தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 720 ரூபாயும், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 52 ரூபாயும் விலை கிடைத்தது.தென்னந்தோப்புகளில் பச்சை தேங்காய் ஒரு டன்னுக்கு 10,200 ரூபாயும், காய்ந்த தேங்காய் டன்னுக்கு 11,300 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கருப்பு தேங்காய் ஒன்று 6.40 ரூபாய்க்கும், பச்சை தேங்காய் ஐந்து ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:தேங்காய் சீசன் துவங்குவதற்கு முன்பாக கொப்பரை விலை உயர்ந்ததால் இந்தாண்டு வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், ஒரு வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறி விட்டது.தேங்காய் எண்ணெய் ஆலைகளில் கலப்படம் அதிகளவில் நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.காங்கேயத்தில் உள்ள நூற்றுக்கணக்கான எண்ணெய் ஆலைகளில் ரெய்டு நடத்தி கலப்படம் நடப்பதையும், கலப்படத்திற்கு பயன்படுத்தப்பட்ட பாம்கர்னல் ஆயில், ரகசிய டேங்கர்களையும் கண்டுபிடித்துள்ளனர்.எண்ணெய் ஆலைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த வாரம் விலை சரிந்துள்ளது.ஏஜன்டுகள், எண்ணெய் நிறுவனங்கள் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்வதையும் கண்டுபிடித்து தடுத்தால் தேங்காய் சார்ந்த பொருட்களின் மார்க்கெட் சரியாது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment