இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மதுரையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது நான்கு பகுதிகளில் தண்ணீர் எடுக்க தடை

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமை, வீட்டு மனைகளாக மாறிப் போன கண்மாய்கள், குப்பை கிடங்காகி போன குளங்கள் என "மாறிப் போன மதுரையில்', நிலத்தடிநீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பல இடங்களில் 500 அடிக்கும் மேல் ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் இல்லை.மதுரை நகரில் மக்கட் தொகை பெருக்கம் காரணமாக, வீட்டிற்கு வீடு ஆழ்குழாய் அமைத்துள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் 800 அடிக்கு கீழ், மீண்டும் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்திலேயே அலங்காநல்லூர், செல்லம்பட்டி, உசிலம் பட்டி, சேடப்பட்டி வட்டங்களில்தான் அதிகமாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கவோ, தண்ணீர் தொடர்பான தொழில் துவங்கவோ தற்காலிகமாக அரசு தடைவிதித்துள்ளது.

பொதுமக்களுக்கான குடிநீர் தொடர்பான பணிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை கிழக்கு, மதுரை மேற்கு யூனியன், கொட்டாம்பட்டி, சேடப்பட்டி ஒன்றியங்களில் 70 சதவீதத்திற்கும் கீழாக தண்ணீரை பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருவதை தவிர்க்க, 2003ல் "நிலத்தடி நீர் பராமரிப்பு பாதுகாப்பு சட்டம்' கொண்டு வரப் பட்டது. அதை செயல்படுத்துவதற்கான கமிட்டி இன்னும் அமைக்கப்படாததால், இச்சட்டம் அமலுக்கு வரவில்லை. இதனால் 1000 அடி வரை கூட ஆழ்குழாய் அமைக்க வாய்ப்புள்ளது. சட்டம் அமலுக்கு வராததால், பொதுப்பணித்துறையினரால் இதை தடுக்க முடியாது. இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்த, மாவட்ட நிர்வாகம் கமிட்டி அமைத்தால் மட்டுமே, பல நூறு அடிகளுக்கு கீழே ஆழ்குழாய் அமைப்பது தடுக்கப்படும். நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.



நிலத்தடி நீர்மட்டம் - ஒப்பீடு



பகுதி 2009 (ஜனவரி) 2010 (ஜனவரி)



அவனியாபுரம் 21 31
எழுமலை 36 20
கள்ளிக்குடி 14 18
கருப்பாயூரணி 9 11
நாகமலை
புதுக்கோட்டை 23 40
பேரையூர் 21 30
கருங்காலக்குடி 8 17
சோழவந்தான் 13 28
உசிலம்பட்டி 30 37
மதுரை நகர்
(தல்லாகுளம்) 45 69
டி.கல்லுப்பட்டி 22 28

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment