கோபி வட்டாரத்தில் கரும்பு சாகுபடி உயர வாய்ப்பு : சர்க்கரை தட்டுப்பாடு, விலை உயர்வு எதிரொலி
7:21 PM கோபி வட்டாரத்தில் கரும்பு சாகுபடி உயர வாய்ப்பு, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
மேலும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை பொது விநியோக திட்டத்துக்கு தரவேண்டும் என அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வெளி மார்கெட்டில் சர்க்கரை விற்பனை செய்ய முடியவில்லை. தட்டுபாட்டை பயன்படுத்தி தனியார் சர்க்கரை ஆலைகள், சர்க்கரை விலையை கணிசமான அளவுக்கு உயர்த்தி வருகின்றன. வரும் மார்ச் மாதத்தில் ஒரு கிலோ சர்க்கரை விலை 50 ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், கரும்பு கொள்முதல் விலையை விவசாயிகள் கோரும் அளவுக்கு அரசு உயர்த்த மறுக்கிறது. இதனால், விவசாயிகள் சென்றாண்டு கரும்பு சாகுபடியை அறவே மறந்து, மாற்றுப்பயிர்களுக்கு தாவினர். இதனால், நடப்பு அறுவடை பருவத்தில் ஆலைகளுக்கு தேவையான அளவு கரும்பு கிடைப்பது சந்தேகமே. வரும் காலத்தில் சர்க்கரை விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரும்புக்கு கொள்முதல் விலை போதியளவு கிடைக்கவில்லை என்ற போதும், சர்க்கரை விலை உயர்வால் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிடத் துவங்கியுள்ளனர். கோபி அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசனப பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெல்தான் அதிகளவில் பயரிடப்பட்டு வருகிறது.
கரும்பு சாகுபடி இரண்டாம் இடத்தில்தான் உள்ளது. கோபி பகுதிகளில் முதல்போக சாகுபடி வரும் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. சென்றாண்டு நடந்த இரண்டாம் போகத்தில் நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் தற்போது அறுவடை துவங்கியுள்ளது. நெல் அறுவடை முடிந்த நிலையில் வரும் முதல் போகத்தில் கரும்பு பயிரிட, விவசாயிகள் அடி உரமாக சணப்பை பயிரை பயிரிடத் துவங்கியுள்ளனர். சர்க்கரை விலை உயர்வால், கரும்புக்கான கொள்முதல் விலையும் உயரலாம் என்ற எதிர்பார்ப்பில், கோபி பகுதியில் நடப்பாண்டு அதிகளவில் கரும்பு பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிச்சொற்கள்: கோபி வட்டாரத்தில் கரும்பு சாகுபடி உயர வாய்ப்பு, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது