சத்தியில் செண்டுமல்லி சாகுபடி அதிகரிப்பு ஆயிலாக மாற்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி
8:27 AM சிறப்பு, செண்டுமல்லி சாகுபடி அதிகரிப்பு ஆயிலாக மாற்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
சத்தியமங்கலம் புதுவடவள்ளியில் உள்ள "ஏ.வி.டி., செண்டுமல்லி' நிறுவனத்தினர், செண்டுமல்லியை மொத்தமாக கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி, ஆயிலாக மாற்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.செண்டுமல்லியின் பவுடர், மருந்து தயாரிக்க உதவுகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் மாத்திரை கண் பாதிப்பை குணமாக்குகிறது. மேலும் செண்டுமல்லியை பொடியாக்கி அதை கோழித்தீவனத்தில் கலந்தால், கோழியின் முட்டை மஞ்சள் கரு அடர்த்தியாக உள்ளதாகவும், கோழி இறைச்சி மஞ்சள் தடவியதுபோல் மாறுவதால், இதை இறைச்சி பிரியர்கள் விரும்புவதாகவும் கூறுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் முக்கிய பூவாக செண்டுமல்லி கருதப்படுகிறது. இதனால், கர்நாடகா வியாபாரிகளும் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். தற்போது கிலோ ஒன்று நான்கு முதல் எட்டு ரூபாய் வரை விற்பனையாகிறது. ஏக்கர் ஒன்றுக்கு பராமரிப்பு செலவாக பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. சத்தியமங்கலம் பகுதியில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் செண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செண்டுமல்லி சாகுபடி அதிகரிப்பு ஆயிலாக மாற்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது