பனியால் பயறு விலை அதிகரிப்பு-பருப்பு வகைகள் விலை நிலவரம்
8:23 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, பனியால் பயறு விலை அதிகரிப்பு 0 கருத்துரைகள் Admin
பனிக்காரணமாக மதுரைக்கு பயறு வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை மூடைக்கு 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பருப்பு வியாபாரிகள் சங்கச் செயலாளர் வெற்றிச்செல்வன் கூறியதாவது :
கடந்த வாரம் 4100 ரூபாய்க்கு விற்ற துவரம் பயறு, நேற்று 4600 ரூபாய்க்கும், பருப்பு 6500 ரூபாயிலிருந்து 6200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. உளுந்தம் பயறு 4500 ரூபாயிலிருந்து 4700 ரூபாய்க்கும், பருப்பு 6800 ரூபாயிலிருந்து 6500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.பாசி பயறு 5100 ரூபாயிலிருந்து 5300 ரூபாய்க்கும், பருப்பு 7700 ரூபாயிலிருந்து 8000 ரூபாய்க்கும், கடலை பயறு 2300 ரூபாயிலிருந்து 2250 ரூபாய்க்கும், பருப்பு 2800 ரூபாயிலிருந்து 2750 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பட்டாணி பயறு 1500 ரூபாய், பருப்பு 1700 ரூபாய் என்பதில் மாற்றமில்லை என்றார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, பனியால் பயறு விலை அதிகரிப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது