இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

முள்ளங்கி விலை கிலோ 5 ரூபாய்-காய்கறி விலை நிலவரம்

கொடைக்கானல் பகுதியில் இருந்து, மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ 10 ரூபாய்க்கு விற்ற முள்ளங்கி, நேற்று 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மற்ற காய்கறி விலை குறித்து, மார்க்கெட் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது :ஒரு கிலோ தக்காளி 9 ரூபாய், உருட்டு தக்காளி 8, கத்தரிக்காய் 20, வெள்ளை கத்தரிக்காய் 15, பூசணிக்காய் 5, புடலங்காய் 8, பீட்ரூட் 10, கேரட் 12, சுரைக்காய் 5, காலிபிளவர் 7-9, முட்டைகோஸ் 4, வெண்டைக்காய் 10, வெங்காயம் 12, சிறிய வெங்காயம் 14, பாகற்காய் 15, சிறிய பாகற்காய் 25, பச்சை மிளகாய் 12, ஆந்திர பச்சை மிளகாய் 9, நூக்கல் 8, முருங்கைக்காய் 40, உருளை கிழங்கு 12, சேனை கிழங்கு 18, கருணை கிழங்கு 16, பட்டாணி 25, இஞ்சி 35, பச்சை மொச்சை18, அவரைக்காய் 9-12, கொத்தவரை 6, கறிவேப்பிலை 14, கொத்தமல்லி 10, புதினா 6, கீரை வகைகள் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றார்.சென்ட்ரல் மார்க்கெட் விலைக்கும், மற்ற இடங்களில் விற்கப்படும் காய்கறி விலைக்கும் சம்மந்தமில்லை

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment