இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி. கத்தரி விவகாரம்: பிரதமர் தலையிட இ.கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மத்திய செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மான்சான்டோ உள்ளிட்ட ஜெய்ராம் ரமேஷ் முடிவு செய்துள்ளார். அத்தகைய முடிவை அவர் நாளைய தினம் பன்னாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்படி மரபணு மாற்றம் செய்ப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி தர மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் அறிவிப்பதை தடுக்கும் வகையில் இப்பிரச்னையில் பிரதமர் தலையிட வேண்டும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு பரவலான எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில், ஒருசில பெருநகரங்களில் மட்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதிலும், கடும் எதிர்ப்பு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பி.டி. கத்தரிக்காய்க்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என்பது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து ஆராய மாநில விவசாய அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும், பி.டி. கத்தரிக்காய் குறித்து அனைத்து சட்டப்பேரவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும்.

எனவே, இப்பிரச்னையில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது முடிவை அறிவிக்கும் முன்னர், பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment