இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி. கத்தரிக்காய் இப்போதைக்கு இல்லை: மத்திய அரசு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு இந்தியாவில் வணிகரீதியில் இப்போதைக்கு அனுமதியில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்தகவலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவுவதால் பி.டி. கத்தரிக்காயை அறிமுகப்படுத்துவதில் கூடுதல் காலம் தேவை. எனவே, இப்போதைக்கு வணிகரீதியாக அந்த கத்தரிக்காய்க்கு அனுமதி இல்லை.

சுதந்திரமான ஆய்வு மூலம் பி.டி. கத்தரிக்காய் பாதுகாப்பானது என்று மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வரை அதற்கு தடை விதிப்பது மற்றும் முன்னெச்சரிக்கை அடிப்படையில் அப்பிரச்னையை அணுகுவது எனது கடமையாகும்.

இவ்வாறு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மரபணு மாற்றம் செய்ப்பட்ட கத்தரிக்காயை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய், வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று இயற்கை வேளாண்மை விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், அந்த வகை கத்தரிக்காய்க்கு இப்போதைக்கு அனுமதியில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment