இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வெற்றிலை விலை வீழ்ச்சி : கொடி விவசாயிகள் கவலை

வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்ததால், தேனி மவட்டம் பெரியகுளம் பகுதி வெற்றிலைக் கொடி விவசாயிகள் கவலையில் உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, பெரியகுளம் கீழவடகரை, தெய்வேந்திரபுரம், தாமரைக்குளம் மற்றும் போடி, சின்னமனூர் பகுதியில் அதிக அளவில் வெற்றிலைக் கொடி பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் விளையும் வெற்றிலை, மதுரை, ராஜபாளையம், கோவில்பட்டி, ராம்நாடு, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைக் கொடி நடவு செய்து பயிர் விளைச்சல் எடுப்பதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. பயிர் செய்து பத்து மாதங்களுக்குப் பிறகு தான் பலன் கிடைக்கும். நோய் தாக்குதல் இல்லாமல் இருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு இதன் பலனை அனுபவிக்கலாம். நோய் தாக்குதல், போதிய அளவு விலை இல்லாத காரணத்தால் சில ஆண்டுகளாக வெற்றிலைக் கொடி பயிரிடும் நிலத்தின் பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளது.

விலை வீழ்ச்சி: நான்கு மாதத்திற்கு முன்பு கருப்பு வெற்றிலை கிலோ 60 ரூபாய், இளசு வெற்றிலை 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக திருச்சி, கரூர், ஆத்தூர் பகுதியில் இருந்து அதிக அளவில வெற்றிலை வருவதால் விலை வெகுவாய் குறைந்துள்ளது. தற்போது கருப்பு வெற்றிலை 25 ரூபாய், இளசு வெற்றிலை 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெற்றிலை விலை குறைந்து வருவதால் வெற்றிலைக் கொடி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.



சில்வார்பட்டி விவசாயி பாலசுப்பிரமணி கூறுகையில்,"" ஏற்கனவே பாதிக்கப்பட்ட வெற்றிலைக் கொடி விவசாயக் குடும்பத்தினர், பிழைப்பிற்காக திருப்பூர் சென்று விட்டனர். வெற்றிலை விலை வீழ்ச்சி பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை வீழ்ச்சியால், இன்னும் பல குடும்பங்கள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment