இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கறவை மாடுகளை தாக்கியுள்ள மடி வீக்க நோய் : தமிழகத்தில் பால் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

தமிழகத்தில் கறவை மாடுகளை மடி வீக்க நோய் தாக்கி வருவதன் எதிரொலியாக, பால் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நோயின் தாக்குதலால் நூற்றுக்கணக்கான மாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. சேலம் மாநகர பகுதியில் முள்ளுவாடி கேட், புறநகர் பகுதியில் வாழப்பாடி, சுக்கம்பட்டி, வலசையூர், அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி தாதனூர் உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான கறவை மாடுகள் மடி வீக்க நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. மேட்டுப்பட்டி தாதனூரில் இந்நோயின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால், அப்பகுதியில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பசு மாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. மாடுகளில் இருந்து கன்றுக்குட்டிக்கு தேவையான பாலை பெற முடியாமல், கன்றுக்குட்டிகள் உயிருக்கு போராடி வருகின்றன. சேலம் முள்ளுவாடி கேட் பகுதியை சேர்ந்த தங்கம்மாள் வளர்த்து வந்த பசு உட்பட 225 பசுமாடுகள் இந்நோயின் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளதால், பால் கறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நோயினால் தாக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்தால் மாடுகள் இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
கால்நடைத்துறையின் நோய் நுண் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட கணக்கீன்படி சேலத்தில் 20க்கும் மேற்பட்ட பசுமாடுகள், கன்றுகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நோய் தாக்கப்பட்ட மாடுகளுக்கு வாயிலிருந்து அதிக அளவில் உமிழ்நீரும், மூக்கில் இருந்து சளியும் வடிந்து கொண்டு இருக்கும். ஒரு வாரத்துக்கு மேல் நோயின் தீவிரம் குறையாமல் உள்ள மாடுகளால் தீவனம் தின்ன முடியவில்லை. இது குறித்து சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ துறையினருக்கு தகவல் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, மாடுவளர்ப்பவர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. கால்நடைத்துறையினர் சிகிச்சை அளிக்க முன் வராததால், சுண்ணாம்பு கற்களை அரைத்து மாடுகளின் மடுவில் தடவி வருகின்றனர் சிலர். தமிழக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சேலம் மாவட்டத்தில் கறவை மாடுகளுக்கு மடி வீக்க நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பால் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கறவை மாடுகளை தாக்கும் மடி வீக்க நோயை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்நோய் குறித்து கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது சேலம் மாவட்டத்தில் கறவை மாடுகளுக்கு மடி வீக்க நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. பொதுவாக இந்நோய் டிசம்பரில் தான் அதிகரிப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டு பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தற்போது நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நோயினால் மாடுகளின் மடுவில் வீக்கம் ஏற்பட்டு பால் கறக்க முடியாது. பால் தேக்கம் அடையும் நிலையில் உடனடியாக அவற்றை வெளியேற்ற வேண்டும். மடுவில் ஏற்படும் வலி காரணமாக மாடுகள் தீவனம் உண்ணாமல் இருந்தால் காய்ச்சல் ஏற்படும். இந்நோயை உருவாக்கும் நச்சுயிரி ஏழு வகைகளையும், 68 துணை வகைகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு நோய் கிளர்ச்சியின் போதும் வேறு வேறு வகையான மடி வீக்க நோய் நச்சுயிரி தாக்குவதற்கு வாய்ப்புள்ளதால், இந்நோய் கால்நடை மருத்துவ துறைக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்நோய் மாடுகளை தாக்கும் முன்னரே எந்த வகை நச்சுயிரியால் நோய் உண்டாகின்றதோ, அதற்கு எதிரான தடுப்பூசி 3 மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக போட்டுக் கொள்ள வேண்டும். இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளின் இறைச்சியை மனிதர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment