இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பட்டுப்புழு வளர்த்தால் லாபம் கிடைக்கும்


  • "மண் ஆய்வு செய்து மல்பெரி ரகங்களை பயிரிடுவதால், பட்டுப்புழு வளர்ப்பில் நல்ல லாபம் பெறலாம்', என செயல் விளக்க கருத்தரங்கில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.உடுமலை அருகேயுள்ள பொட்டிநாயக்கனூர் கிராமத்தில் "ஆத்மா' திட்டத்தின் கீழ் பட்டு வளர்ப்பு செயல்விளக்கம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.பட்டு விவசாயி வேலாயுதசாமி முன்னிலை வகித்தார். பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் குலாம்முகமது வரவேற்றார். பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் பேசியதாவது: உடுமலை பகுதி விவசாயிகள் வெண்பட்டு வளர்ப்பில் முன் னோடியாக உள்ளனர். மல்பெரி செடிகளை தாக்கும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்து நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பட்டுக்கூடுகளை மாநில அரசின் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும் என்றார்.மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நிலைய விஞ்ஞானி செல்வராஜ், பட்டுப்புழு வளர்ப்பில் தேவையான உற்பத்தி பெற மல்பெரி செடி வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


    செடிகளை பயிரிடும் முன் மண் பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும்.பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் உரங்களை பயன்படுத்துவதால் சாகுபடி செலவு குறைக்கப் படுவதுடன், தேவையான உற் பத்தியும் பெற முடியும். தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்துவதால், விரயம் குறைந்து, வயலில் தேவையற்ற களைகள் முளைக்காது.கோடையில் முறையாக சாகுபடி தொழில்நுட்பங்களை பயன் படுத்தினால் கூடுதலாக மல்பெரி இலைகளை அறுவடை செய்யலாம். உடுமலை பகுதி விவசாயிகள் தொழில்நுட்பங்களை முறையாக பின்பற்றுவதால் ஆண்டு முழுவதும் வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடிகிறது. பரிசோதனை முறையில் முதற்கட்டமாக ஆண்டு முழுவதும் மூன்று விவசாயிகள் வெண் பட்டுக்கூடுகளை வளர்த்தனர்.கடந்த சில ஆண்டுகளில் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக உயர்ந்துள்ளது. மண் பரிசோதனை, மல்பெரி செடி, புழு வளர்ப்பு மனைகளை முறையாக பராமரித்தால் அனைத்து சீசன்களிலும் நல்ல உற்பத்தி பெற முடியும் இவ்வாறு பேசினார்.பப்பாளி மாவுப்பூச்சி தடுப்பு முறைகள் குறித்து உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் பேசினார்.


குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment