தெளிப்பு நீர்பாசனம் அமைக்க மானியம்
4:07 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, தெளிப்பு நீர்பாசனம் அமைக்க மானியம் 0 கருத்துரைகள் Admin
"தெளிப்பு நீர்பாசனம் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு 7,500 ரூபாய் (50 சதவீதம்) மானியம் வழங்கப்படுகிறது' என,நாமக்கல் மாவட்டம் மோகனூர் வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜூ தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:
வேளாண் துறையில் மோகனூர் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தெளிப்பு நீர்பாசனம் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு 7,500 ரூபாய் (50 சதவீதம்) மானியம் வழங்கப்படுகிறது. அதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல் மற்றும் நிலை வரைபடம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் மையத்தை அணுகி பயன்பெறலாம்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, தெளிப்பு நீர்பாசனம் அமைக்க மானியம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது