இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொள்முதல் அதிகரிப்பு :பயறு, பருப்பு விலை உயர்வு : ஆந்திரா சர்க்கரை வரத்தால் விலையில் சரிவு

விருதுநகரில் மொத்த வியாபாரிகள் பயறு, பருப்பு கொள்முதல் அதிகரித்ததால் மூடைக்கு 200லிருந்து 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு குறைந்தாலும் ஆந்திராவில் இருந்து சர்க்கரை வரத்தால் விலை மூடைக்கு நூறு ரூபாய் குறைந்துள்ளது.விலை உயர்வு:விருதுநகரில் கடந்த வாரம் துவரம்பருப்பு மூடைக்கு நயம் 6,000 ஆக இருந்தது 6,200 ஆகவும் சுமார் ரகம் 5,500 ரூபாயாக உள்ளது. துவரை பயறு 4,100 லிருந்து 4,300 ரூபாயாக ஆகவும், 2வது ரகம் 3,500 லிருந்து 3,700 ஆக உயர்ந்துள்ளது. பாசிப்பயறு மூடைக்கு 4,800லிருந்து 5,200 ரூபாயாக ஆகவும், பாசிப்பருப்பு 6,800 லிருந்து 7,000ஆகவும், உளுந்து 4,300 லிருந்து 4,600 ரூபாயகவும், பர்மா உளுந்து 3,800 லிருந்து 4,000 ரூபாயாகவும், பர்மா பொடி உளுந்து 5,000 லிருந்து 5,300 ரூபாயாகவும், நாடு நயம் உளுந்து 6,500 லிருந்து 6,700 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.


கடந்த முன்று மாதங்களாகவே பருப்பு, பயறு விலை குறைந்து வந்தது. விலை குறைவு காரணமாக வியாபாரிகள் கொள்முதல் அதிகரித்ததால் விலை 200 முதல் 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தற்போது கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதியில் இருந்து பருப்பு, பயறு வருகை அதிகரித்த போதும் விலை உயர்ந்துள்ளதால் பருப்பு வியாபாரம் மந்தமாகியுள்ளது.கொண்டைக்கடலை 2,300ரூபாயிலிருந்து 2,250 ரூபாயாகவும், பொரிகடலை 1,850 லிருந்து 1,770 ரூபாயாகவும் குறைந்துள்ளது. புது வரத்து அதிகரித்திருப்பதால் பொரிகடலை, கொண்டக்கடலை விலை குறைந்துள்ளது.சர்க்கரை விலை குறைவு: மூடைக்கு 4,150 ஆக இருந்த சர்க்கரை 4,050 ரூபாயாக குறைந்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசின் சர்க்கரை ஒதுக்கீடு கடந்த மாதம் 11 லட்சம் மூடையாக இருந்தது. பிப்ரவரி மாதத்திற்கு 3.80 லட்சம் மூடைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இதனால் தமிழகத்தில் சர்க்கரை வரத்து குறைந்தாலும், ஆந்திர மாநிலத்திற்கு அதிக ஒதுக்கீடு காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு சர்க்கரை வரத்து அதிகரித்து இருப்பதால் மூடைக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது.எண்ணெய் விலை உயர வாய்ப்பு: கடந்த வாரத்தில் கடலெண்ணெய் டின்னுக்கு 1,080 ரூபாய் இந்த வாரமும் அதே விலையில் உள்ளது. பாமாயில் 635 ஆக இருந்தது 610 ரூபாயாகவும், சூரியகாந்தி எண்ணெய் 860 ரூபாயாகவும் உள்ளது. நிலக்கடலை பருப்பு 3,250 ஆகவும், கடலைப்புண்ணாக்கு 2,600 ரூபாயாகவும் உள்ளது. டாலர் மதிப்பு 46 ரூபாயாக உயர்ந்திருப்பதால் எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment