இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கோழி வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி முகாம்

விருதுநகர் கலெக்டர் சிஜிதாமசின் செய்திக் குறிப்பு:கோழி வெள்ளைக் கழிச்சல்என்பது புறக்டைக் கோழிகள், பண்ணைக் கோழிகள்,வான்கோழி மற்றும் வாத்துக்களைத் தாக்கும் வைரசினால் பரவும் நோயாகும்.இந்த நோய் கண்ட கோழிகள் வெள்ளை நிறத்தில் கழிச்சல் ஏற்பட்டு சோர்ந்து போய் அதிக அளவில் இறப்பை ஏற்படுத்தும்.இந்த நோய் வெயில் காலத்தில் அதிக அளவு பரவும்.இந்நோயைத் தடுக்க 8 வார வயதிற்குட்பட்ட கோழிகளுக்கு வருடம் ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும். இதற்கான தடுப்பூசி போடும் முகாம் கடந்த 2ம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை ஆஸ்பத்திரி, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் மூலம் நடைபெறுகிறது. இம்முகாமில் 1 லட்சத்து 15 ஆயிரம் டோஸ்கள் வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி போடப் பட உள்ளது. தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள் ளார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment