இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மஞ்சியில் 'எஞ்சி' இருக்கும் 'பித்பிளாக்' உற்பத்தி அதிகரிப்பு! உடுமலை கிராமப் பகுதிகளில் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மஞ்சி உற்பத்தியில் மட்டும் ஈடுபட்ட வந்த உற்பத்தியாளர்கள் தற்போது, மஞ்சி கழிவிலிருந்து "பித்பிளாக்' தயாரிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இவைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உடுமலை பகுதி விவசாயத்தை பிரதானமாக உள்ளதால், விவசாயம் சார்ந்த தொழில்களும் வளர்ச்சியடைந்து வருகிறது. தென்னை மரங்கள் அதிகளவு உள்ளதால், தென்னை சார்ந்த, மஞ்சி உற்பத்தி தொழிற்சாலைகள் 60 உள்ளது. விளைநிலங்களிலிருந்து தேங்காய் மட்டைகளை வாங்கி மில்லுக்கு கொண்டு வரும் வரை, ஆயிரம் மட்டைகளுக்கு 500 ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இயந்திரங்களின் மூலம் மட்டை "மஞ்சி'யாக மாற்றப்படுகிறது. மஞ்சி தயாரித்ததும் நன்கு காய வைத்து பண்டலாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது; ஒரு பண்டல் (30 கிலோ) 400 ரூபாய் வரை விற்பனையாகிறது.
உடுமலை பகுதியில் உற்பத்தி செய்யப் படும் மஞ்சி, கயிறு ஆகியவையாக மாற்றப்பட்டு, கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிருந்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்படுகிறது. மழைக்காலங்களை தவிர, கோடைகாலங்களில் அதிகளவு உற்பத்தி மேற்கொள் ளப்படுகிறது. மஞ்சி மில்லில் தயாரித்த பின்பு மீறும் மஞ்சி கழிவுகளிலிருந்து "பித்பிளாக்' தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். மஞ்சி மில்லிலிருந்து மீறும் கழிவுகளை எடுத்து சளித்து பின், "பில்டர்' செய்யப்படுகிறது. பின், பவுடராக பிரிக்கப்பட்டு, இயந்திரம் மூலமாக "பித்பிளாக்' தயாரிக்கப்படுகிறது. உடுமலை பகுதியில் தளி மற்றும் எரிசனம்பட்டி பகுதிகளில் தயாரிக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
"பித் பிளாக்' உற்பத்தியாளர்கள் கூறியதாவது:உடுமலை பகுதியில், மஞ்சி உற்பத்தியில் அதிகளவு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மஞ்சி கழிவிலிருந்து "பித்பிளாக்' தயாரிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. கழிவுகளை தரம்பிரித்து, இயந்திரங்கள் மூலமாக "ஹைட்ராலிங் பிரசிங்' செய்து "பித்பிளாக்' தயாரிக்கப்படுகிறது.ஓரு மணி நேரத்திற்கு 400 முதல் 500 கிலோ வரையும், ஒரு நாளைக்கு 4 டன் வரையும் தயாரிக்கப்படுகிறது. சைனா, நெதர்லாந்து, கொரியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில், விளைநிலங்களில் பயன்படுத்துவதற்காக "பித்பிளாக்' பயன்படுகிறது. இவ்வாறு, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment