இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாய சேவை மையங்களுக்கு தொடக்க கூட்டுறவு சங்கங்கள் தேர்வு


விருதுநகர் மாவட்டத் தில் முன் மாதிரி விவசாய பல்நோக்கு சேவை மையங்களாக செயல்படுவதற்கு 5 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன் மாதிரியாக 5 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை தேர்வு செய்து விவசாய சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த சேவை மையங்களில் விவசாயிகளின் விவசாய பணிகளுக்கு தேவையான பவர் டில்லர், டோசர், ரோட்டாவேட்டர், அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கும் உரங்கள், விதைகள் போன்றவைகள் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன. இந்த விவசாய சேவை மையங்களின் செயல்பாடு வெற்றிகரமாக இருந்தால் மாவட்டம், மாநிலம் முழுவதும் செயல்படுத்த கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.விருதுநகர் மாவட்டத் தில் வாழ்வாங்கி, நென்மேனி, சிங்கராஜாகோட்டை, குமிழங்குளம், மகாரஜபுரம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாய சேவை மையங்கள் துவக்கப்படவுள்ளன. இதற்காக அந்த சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என இணைப்பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்தார்

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment